Asianet News TamilAsianet News Tamil

உ.பி.யில் 33 புதிய தொழில்முனைவோர் நண்பர்களை நியமிக்ககும் யோகி அரசு

உத்தரப் பிரதேச அரசு விரைவில் 33 புதிய தொழில்முனைவோர் நண்பர்களை நியமிக்க உள்ளது. இன்வெஸ்ட் யுபி தேர்வு செயல்முறையை முடித்ததை அடுத்து, தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் ஒரு வருட ஒப்பந்த அடிப்படையில் பணி நியமனம் பெறுவார்கள்.

Yogi Government to Appoint 33 Business Associates in Uttar Pradesh sgb
Author
First Published Oct 10, 2024, 11:47 AM IST | Last Updated Oct 10, 2024, 11:47 AM IST

உத்தரப் பிரதேசத்தை சிறந்த மாநிலமாக மாற்றும் நோக்கில் செயல்படும் யோகி அரசு விரைவில் 33 தொழில்முனைவோர் நண்பர்களை நியமிக்க உள்ளது. மாநிலத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட 20 இடங்கள் மற்றும் காலியாக உள்ள 13 இடங்களை நிரப்புவதற்காக இன்வெஸ்ட் யுபி தேர்வு செயல்முறையை முடித்துள்ளது.

தொழில்முனைவோர் நண்பர்களாக 33 தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் ஒரு வருட ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்படுவார்கள். முழு வெளிப்படைத்தன்மையுடன் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணலுக்குப் பிறகு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

2023ஆம் ஆண்டில் முதல்வர் யோகி முதன்முறையாக 102 தொழில்முனைவோர் நண்பர்களை நியமித்தது குறிப்பிடத்தக்கது.  இவர்கள் மாநிலத்தில் முதலீடு செய்யும் தொழில்முனைவோர் மற்றும் அரசு இயந்திரங்களுக்கு இடையே ஒரு பாலமாகச் செயல்பட்டு அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு காண முயற்சி செய்வார்கள்.

முதல்வர் யோகியின் தொலைநோக்குப் பார்வையில் உருவாக்கப்பட்ட இந்தத் திட்டத்தின் கீழ், புதிதாக 33 தொழில்முனைவோர் நண்பர்களை நியமிப்பதன் மூலம் உத்தரப் பிரதேசத்தில் முதலீடு செய்வது எளிமைப்படுத்தி, வேகமாக புதிய முதலீடுகளை ஈர்க்க முடியும் என்று உ.பி. அரசு கருதுகிறது.

இன்வெஸ்ட் யுபி மூலம் பயிற்சி:

தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் இன்வெஸ்ட் யுபியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் உள்நுழைந்து முடிவுகளைப் பார்க்கலாம். இன்வெஸ்ட் யுபி வெளியிட்டுள்ள 33 வெற்றியாளர்களின் பட்டியரலில் இடம்பெற்றுள்ளவர்கள் விவரம் பின்வருமாறு:

புல்கித் தியாகி, அன்ஷுமான் பிரதாப் சிங், பிரணவ் மிஸ்ரா, தேவேஷ் குமார் யாதவ், சந்தோஷ் ரத்தோர், உஜ்ஜ்வல் கவுர், ஷாருக்கான் சலீம், திவ்யான்ஷ் குமார் ஓஜா, அமோல் திரிபாதி, அதுல் பாஜ்பாய், திலீப் சிங் தோமர், சுதன்ஷு சிங், துஷார் சிங், லலித் மோகன் ஜோஷி, நுபுர் உபாத்யாய், சிவாங்கி சிங், ஆகாஷ் குமார் ராய், ஆயுஷ் குப்தா, அக்ஷித் நெட்டியால், குல்தீப் சிங், தோஷேந்திர குமார் மிஸ்ரா, ரோஹித் குமார், மீத் மதுர், சௌரப் குமார், அர்பித் சிங், கவுரவ் ராஜ் சிங், அபின்னவ் மிஸ்ரா, கோமோத் சிங் யாதவ், துர்கேஷ் சிங், மனீஷ் திவாரி, புனீத் சர்மா, இஷானி ஸ்ரீவத்சவா மற்றும் யஷி சவுகான் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இவர்கள் அனைவருக்கும் இன்வெஸ்ட் யுபி பயிற்சி அளிக்கும், அதன் பிறகு அவர்கள் நியமிக்கப்படுவார்கள்.

மெசர்ஸ் எச்.சி.எல். ஐ.டி. சிட்டிக்கு ரூ.21.08 கோடி மானியம்:

உ.பி. அரசு மற்றொரு முக்கிய முடிவையும் எடுத்துள்ளது. லக்னோவில் உள்ள எச்.சி.எல். ஐ.டி. சிட்டிக்கு ரூ.21.08 கோடி மானியமாக வழங்க யோகி அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதில் வட்டியாக ரூ.19.50 கோடியும், பயிற்சி கட்டணமாக ரூ.1.57 கோடியும் அனுமதிக்கப்பட்டுள்ளது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios