தீபாவளியை முன்னிட்டு 1.86 கோடி குடும்பங்களுக்கு இலவச சிலிண்டர்!
கடந்த ஆண்டு, உத்தரப்பிரதேச அரசு 1.85 கோடி குடும்பங்களுக்கு இலவச எல்பிஜி சிலிண்டர்களை வழங்கியது குறிப்பிடத்தக்கது. இதில் 85 லட்சத்திற்கும் மேற்பட்ட பெண்கள் பயனடைந்தனர். பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ், ஹோலி மற்றும் தீபாவளி பண்டிகைகளின் போது, மாநிலத்தில் ஆண்டுக்கு இரண்டு முறை இலவச எல்பிஜி சிலிண்டர்கள் வழங்கப்படுகின்றன.
உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசு, மாநிலத்தில் 1.86 கோடி குடும்பங்களுக்கு தீபாவளிக்காக இலவச எல்பிஜி சிலிண்டர்களை வழங்கத் தொடங்கியுள்ளது. இதற்காக அரசு ரூ.1,890 கோடி ஒதுக்கியுள்ளது.
கடந்த ஆண்டை விட அதிக எண்ணிக்கையிலான பயனாளிகளுக்கு சிலிண்டர்களை வழங்குவது தொடர்பான அரசாணை வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து, வழங்கும் பணி தொடங்கியுள்ளது.
கடந்த ஆண்டு, உத்தரப்பிரதேச அரசு 1.85 கோடி குடும்பங்களுக்கு இலவச எல்பிஜி சிலிண்டர்களை வழங்கியது குறிப்பிடத்தக்கது. இதில் 85 லட்சத்திற்கும் மேற்பட்ட பெண்கள் பயனடைந்தனர். பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ், ஹோலி மற்றும் தீபாவளி பண்டிகைகளின் போது, மாநிலத்தில் ஆண்டுக்கு இரண்டு முறை இலவச எல்பிஜி சிலிண்டர்கள் வழங்கப்படுகின்றன.
உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ், ஒவ்வொரு பயனாளிக்கும் மத்திய அரசு ரூ.300 மானியம் வழங்குகிறது, மீதமுள்ள தொகையை மாநில அரசு வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஒவ்வொரு பயனாளியும் 14.2 கிலோ சிலிண்டர் ரீஃபிளைப் பெறுகிறார்கள்.