Yogi Aduyanath
சூரிய நமஸ்காரமும், நமாஸும் ஒன்னுதான்….அடித்துவிடும் ஆதித்யநாத்….
சூரிய நமஸ்காரமும், முஸ்லிம்களின் நமாஸும் ஒன்றுதான் என்றும் சூரிய வணக்கத்துக்கு எதிர்ப்புத் தெரிவிப்பவர்கள், சமூகத்தை மத அடிப்படையில் இரண்டாக பிளவுபடுத்த விரும்புகிறார்கள் என்றும் உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.
உத்தரப் பிரதேச தலைநகர் லக்னோவில் யோகா மகோத்சவ தொடக்க விழா நடைபெற்றது.
இதில் பங்கேற்றுப் பேசிய உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் முஸ்லிம்கள் பல்வேறு முறைகளில் மேற்கொள்ளும் நமாஸும், பிராணாயாமம் உள்பட சூரிய வணக்கத்தின்போது மேற்கொள்ளும் ஆசனங்களும் ஒரே மாதிரியானதுதான் தான் என்று தெரிவித்தார்
சமூக நல்லிணக்கத்துக்கு எவ்வளவு அழகான எடுத்துக்காட்டு இது என தெரிவித்த யோகி, யோகா மீது நம்பிக்கை இல்லாத, சிலர், சமூகத்தை ஜாதி, இனம், மதம், பிராந்திய அடிப்படையில் பிளவுபடுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக குற்றம்சாட்டினார்.
சூரிய வணக்கத்தில் இருக்கும் அனைத்து ஆசனங்களும், முஸ்லிம் சகோதரர்களின் நமாஸும் ஒரே மாதிரியானதுதான். ஆனால், அதை ஒரே மாதிரியானதாக்க யாரும் முயற்சி எடுக்கவில்லை என கூறினார்.

கடந்த 2014-ஆம் ஆண்டுக்கு முன்பு யோகா குறித்து பேசினால், அது மதவாதமாக பார்க்கப்பட்டது. ஆனால், உலகம் முழுவதும் யோகாவை பிரபலப்படுத்த நரேந்திர மோடி நடவடிக்கைகள் எடுத்த பிறகு, அந்த எண்ணம் மாறிவிட்டதாகவும் கூறினார். எனவே அரசு அலுவலகங்களில் பணிபுரியும் அனைவரும் யோகா செய்ய வேண்டும் என்றும் யோகி ஆதித்யநாத் கேட்டுக்கொண்டார்.
