yogi adityanath surprise visit in police station
உத்தரப்பிரதேசத்தில் லக்னோ உள்ளிட்ட சில போலீஸ் நிலையங்களுக்கு முதல்வர் ஆதித்ய நாத் திடீர் ‘விசிட்’ அடித்ததால் போலீஸ் அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
முதல்வர் ஆதித்யநாத்
உத்தரப்பிரதேசத்தில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அமோக வெற்றி பெற்ற பாரதிய ஜனதா கட்சி 15 ஆண்டுகளுக்கு பின், ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. அங்கு முதல்வராக கோராக்பூர் மடாபதிபதியும், எம்.பி.யுமான யோகி ஆதித்யநாத் பொறுப்பு ஏற்றுள்ளார்.
புதிய அறிவிப்புகள்
முதல்வர் ஆதித்யநாத் பொறுப்பு ஏற்றதில் இருந்து நாள்தோறும் புதிய அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். அயோத்தியில் நீண்ட காலமாக கிடப்பில் இருந்த ராமாயண அருங்காட்சியகம் அமைக்க 25 ஏக்கர் நிலத்தை ஒதுக்கினார்.

சட்டவிரோதமாக செயல்பட்டு வரும் இறைச்சி வெட்டும் கூடங்கள், பசுக்கள் கடத்தல் ஆகியவற்றுக்கும் தடை விதித்து உத்தரவிட்டார். பெண்களை பாதுகாக்கும் வகையில், ‘ஆன்ட்டி ரோமியோ’ படையை உருவாக்கி, பெண்களுக்கு தொந்தரவு கொடுக்கும் ஆட்களை கைது செய்ய நடவடிக்ைக எடுத்தார்.
திடீர் விசிட்
உள்துறை அமைச்சர் பொறுப்பு வகிக்கும் ஆத்தியநாத், நேற்று திடீரென லக்னோ போலீஸ் நிலையம், ஹஸ்ரத்கஞ்ச் போலீஸ் நிலையத்துக்கு சென்று ஆய்வு மேற்கொண்டார். இதைக் கண்டு போலீஸ் நிலையத்தில் இருந்த அதிகாரிகளும், போலீசாரும் அதிர்ச்சியில் மிரண்டு விட்டனர்.

சட்டத்தின் ஆட்சி
அதன்பின், முதல்வர் ஆதித்யநாத் நிருபர்களிடம் கூறுகையில், “ மாநிலத்தில் சட்டத்தின் ஆட்சி எப்படி செயல்பாட்டில் இருக்கிறது, போலீஸாரின் நிலை, ஒழுக்கம் எப்படி இருக்கிறது என்பதைப் பார்க்கவே இங்கு வந்தேன். இதற்கு தகுந்த நடவடிக்கை எப்படி எடுக்கலாம் என்பதையும் பார்க்க வந்துள்ளேன்.
மாநிலத்தில் சட்டத்தின் முழுமையான ஆட்சி நடைமுறை தேவையான நடவடிக்ைககள் அனைத்தையும் எடுப்பேன்'' என்றார்.
எச்சரிக்கை
மேலும், அதிகாரிகளிடம், என்னென்ன வசதிக் குறைகள் உள்ளன என்பதையும், சைபர் கிரைம், குற்றவியல் பிரிவு ஆகியவற்றிலும் முதல்வர் ஆதித்யநாத் ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வு என்பது கடைசியானது அல்ல, இதுதான் தொடக்கம், சட்டம் ஒழுங்கில் அனைத்து வழிகளிலும் முன்னேற்றத்தை நான் பார்க்க வேண்டும் என்று அவர் எச்சரித்துச் சென்றார்.
உதவிகள்
இது குறித்து போலீஸ் டி.ஜி.பி. ஜாவித் அகமது கூறுகையில், “ போலீஸ் துறைக்கு தேவையான அனைத்து உதவிகள், வசதிகள், வாகனங்கள், நவீன தொழில்நுட்பங்களையும் கொண்டுவரப்படும் என முதல்வர் உறுதியளித்துள்ளார்'' என்றார்.
அலுவலகத்தை சுத்தம் செய்த அமைச்சர்...
உத்தரப்பிரதேச தலைமைச் செயலகத்தை நேற்று முன்தினம் ஆய்வு செய்த முதல்வர் ஆதித்யநாத், சுவர்களில் பான்மசாலா, குட்கா எச்சில் கறை படிந்து இருப்பது கண்டு அறுவறுப்பு அடைந்தார்.

அதனால், வேலை நேரத்தில் அதிகாரிகள் பான்மசாலா, குட்கா மெல்லக்கூடாது என்றும், அலுவலகத்தை சுத்தமாக பராமரிக்கவும் முதல்வர் உத்தரவிட்டார். இந்நிலையில், மாநில அமைச்சர் உபேந்திர திவாரி என்பவர் நேற்று திடீரென துடைப்பம், வாளியில் தண்ணீர் எடுத்துக்கொண்டு தனது அலுவலகத்தை சுத்தம் செய்யத் தொடங்கினார்.
இதைப் பார்த்துக்கொண்டு இருந்த பணியாளர்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது. அப்போது அமைச்சர்களிடம் கேட்டபோது, முதல்வர் ஆதித்யநாத் அலுவலகத்ைத சுத்தமாக வைத்து இருக்க உத்தரவிட்டுள்ளார் என்றார்.
