Yogi adityanath

EVM என்பதற்கு Every Vote Modi என உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதிய நாத் விளக்கம் அளித்துள்ளார்.

கோரக்பூரில் பாஜக நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. அதில் பங்கேற்றுப் பேசிய உத்திரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதி்ய நாத், டெல்லி உள்ளாட்சி தேர்தலில் பாஜக சாதனை வெற்றிபெற்றுள்ளதாக தெரிவித்தார்.

உத்தரபிரதேசம் உள்ளிட்ட 5 மாநில தேர்தல்களின் போது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை குறை சொன்னவர்கள் தற்போது என்ன சொல்வார்கள் என கேள்வி எழுப்பினார்.

தேர்தல் முடிவுகள் பல முதலமைச்சர்களை தோல்வியுற செய்துள்ளது என்றும் அதில் உத்தரபிரதேசத்தில் அகிலேஷ் யாதவ், மாயாவதி ஆகியோரை போன்று டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் என பட்டியல் நீளுகிறது என்றும் தெரிவித்தார்.

வீழ்ந்தவர்கள் EVM எனப்படும் மின்னணு வாக்குப்ப்பதிவு இயந்திரத்தை குறை கூறினார்கள். அதில் உண்மையில்லை னெ தெரிவித்தார்.

EVM என்றால் ‛Every Vote Modi' , அதாவது ஒவ்வொரு ஓட்டும் மோடிக்கே என வாக்காளர்கள் தேர்தல் முடிவுகளை காட்டிவிட்டார்கள் என்றும் அயாகி ஆதித்யநாத் தெரிவித்தார்.