yaswant sinha attack to bjp

அமித் ஷா மகன் ஊழல் குற்றச்சாட்டு விவகாரத்தில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் அறிக்கை வெளியிட்டு பேசியது, பா.ஜனதா இதுவரை கட்டிக்காத்த உயர் ஒழுக்க நெறிகளை இழந்துவிட்டதாக பார்க்கிறேன் என்று அந்த கட்சியின் மூத்த தலைவர் யஷ்வந்த் சின்ஹா கடுமையாக விமர்சித்துள்ளார்.

அமித் ஷா மகன்

பா.ஜனதா தலைவர் அமித் ஷா மகன் ஜெய் ஷா நிறுவனம் ஒரே ஆண்டில் ரூ.80 கோடி சொத்து சேர்த்துவிட்டதாக ‘தி வயர்’ எனும் இணையதளம் புலனாய்வு கட்டுரை வெளியிட்டு இருந்தது. இதற்கு மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் விளக்கமளித்தார். மேலும், அந்த இணையதளத்துக்கு எதிராக ஜெய் ஷா தரப்பில் ரூ.100 கோடி கேட்டு நீதிமன்றத்தில் கிரிமினல் வழக்கும், அவதூறு வழக்கும் போடப்பட்டுள்ளது.

இது குறித்து பா.ஜனதா கட்சியின் மூத்த தலைவர் யஷ்வந்த் சின்ஹா பாட்னாவில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது-

தணிக்கையாளர் அல்ல

அமித் ஷா மகன் ஜெய் ஷா விவகாரத்தில் மத்திய அமைச்சர் ஒருவர் வக்காளத்து வாங்கிக்கொண்டு திடீரென பேசியுள்ளது தேவையில்லாதது. அவர் ஒரு மத்திய அமைச்சர், ஜெய் ஷாநிறுவனத்தின் தலைமை தணிக்கையாளர் அல்ல.

அதுமட்டுமல்லாமல் மிகவும் அத்தியாவசியமான சூழலில் மட்டுமே கூடுதல் சொலிசிட்டர் ஒரு வழக்கில் ஆஜராக அனுமதி வழங்கலாம். ஆனால், அமித் ஷா மகனுக்காக இணையதளம் மீது வழக்கு தொடர கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தாவுக்கு அனுமதி தரப்பட்டுள்ளது.

குரலை ஒடுக்கும் செயல்

இந்த செயல்பாடுகள் பா.ஜனதா கட்சி இத்தனை ஆண்டுகள் கட்டிக்காத்து வந்த உயர் ஒழுக்க நெறிகளை இழந்துவிட்டதை காட்டுகிறது.

மேலும், செய்தியை வெளியிட்ட இணையதளத்துக்கு எதிராக ரூ.100 கோடி இழப்பீடு வழக்கு தொடர்ந்த அமித் ஷா மகனின் செயல் ஊடகத்தின் குரலை ஒடுக்கும் ெசயலாகும் இதை தவிர்க்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.