அரசாங்க உத்தரவுகளைத் தொடர்ந்து, இந்தியாவில் எக்ஸ் சமூக ஊடகத் தளத்தில் 8,000 க்கும் மேற்பட்ட கணக்குகளை முடக்கியுள்ளது. உத்தரவுக்கு இணங்கத் தவறினால் கடும் அபராதம் மற்றும் சிறைத்தண்டனை விதிக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
இந்திய அரசாங்கத்தின் உத்தரவுகளைத் தொடர்ந்து, இந்தியாவில் உள்ள 8,000 க்கும் மேற்பட்ட கணக்குகளை எக்ஸ் சமூக ஊடக நிறுவனம் முடக்கத் தொடங்கியுள்ளது. உத்தரவுக்கு இணங்கத் தவறினால் நிறுவனத்தின் உள்ளூர் ஊழியர்களுக்குக் கணிசமான அபராதம் மற்றும் சிறைத்தண்டனை விதிக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
பிரபல நபர்கள் மற்றும் உலகளாவிய செய்தி நிறுவனங்கள் நடத்தும் கணக்குகள் உட்பட ஏராளமான கணக்குகள் இந்த விதியால் பாதிக்கப்பட்டுள்ளன. அரசாங்கத்தின் நடவடிக்கைக்கு இணங்கத் தவறினால், இந்தியாவில் எக்ஸ் தளம் முழுமையாக முடக்கப்படும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
“இது எளிதான முடிவு அல்ல,” என்று நிறுவனம் எக்ஸ் நிறுவனம் தறது அறிக்கையில் தெரிவித்துள்ளது. இருப்பினும், இந்தியாவில் தளத்தை அணுகக்கூடியதாக வைத்திருப்பதற்காக அரசு உத்தரவின்படி கணக்குகளை முடக்கத் தொடங்கியிருப்பதாகத் தெரிவித்துள்ளது.
எக்ஸ் நிறுவனத்தின் விமர்சனம்:
எந்த உள்ளடக்கம் இந்தியச் சட்டத்தை மீறியது எனக் கூறும் பல உத்தரவுகள் தெளிவற்றதாக உள்ளதாக எக்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. “எந்தக் கணக்கில் இருந்து எந்தப் பதிவுகள் இந்தியச் சட்டங்களை மீறியுள்ளன என்பதை இந்திய அரசாங்கம் பொதுவாக அடையாளம் காட்டவில்லை” என்று தனது அறிக்கையில் கூறியுள்ளமது. “கணிசமான எண்ணிக்கையிலான கணக்குகளை முடக்க எங்களுக்கு எந்த ஆதாரமும் அல்லது நியாயமும் கிடைக்கவில்லை” எனவும் தெரிவித்துள்ளது.
இருப்பினும், அரசு உத்தரவால் முடக்கப்படும் கணக்குகள் தொடர்பாக பாதிக்கப்பட்ட பயனர்களுக்கு எக்ஸ் நிறுவனம் தரப்பில் தகவர் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் சட்ட உதவியை நாடலாம் என்றும் வலியுறுத்தியுள்ளது.
சமூக ஊடகக் கணக்குகள் மீதான நடவடிக்கை
பஹல்காமில் சமீபத்தில் நடந்த பயங்கரவாதச் சம்பவத்தைத் தொடர்ந்து இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பதற்றம் அதிகரித்து வருவதால், “ஆத்திரமூட்டும்” உள்ளடக்கத்தைப் பரப்புவதாகக் கூறி, பல செய்தித் தளங்கள் உட்பட ஒரு டஜனுக்கும் மேற்பட்ட பாகிஸ்தான் YouTube சேனல்களை இந்திய அரசாங்கம் முன்பு முடக்கியது.
நடிகர்கள் ஃபவாட் கான் மற்றும் ஆதிஃப் அஸ்லாம், பாபர் அசாம், முகமது ரிஸ்வான், ஷாஹித் அஃப்ரிடி மற்றும் வசீம் அக்ரம் போன்ற கிரிக்கெட் வீரர்கள் உட்பட பல முக்கிய பாகிஸ்தான் பொது நபர்கள் இந்திய தளங்களில் முடக்கப்பட்டுள்ளனர் அல்லது கருப்புப் பட்டியலிடப்பட்டுள்ளனர்.


