உலக தியான தினம்: ஒவ்வொரு மனிதனும் 'மனதின் அற்புதத்தை' அனுபவிக்க வேண்டும்! சத்குருவின் பதிவு!
தியானம் செய்வதால், ஒவ்வொரு மனிதனும் மனதில் நடக்கும் அற்புதத்தை அனுபவிக்க முடியும் என சத்குரு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியுள்ளதை முழுமையாக பார்ப்போம்.
தியானத்தினால் மனிதர்களுக்கு கிடைக்கும் அற்புதமான ஆற்றலை அங்கீகரித்து, ஐக்கிய நாடுகள் சபை டிசம்பர் 21 ஆம் தேதியை உலக தியான தினமாக அறிவித்துள்ளது. இந்த உண்மையின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையில், ஈஷா அறக்கட்டளையின் நிறுவனர், சத்குரு இது தொடர்பாக ஒரு செய்தியை வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து எக்ஸ் தள பக்கத்தில் சத்குரு பதிவிட்டுள்ளதாவது, "தியானம் என்பது நம் மனதை எவ்வாறு பயன்படுத்துவது என்பதை நீங்கள் கற்றுக்கொள்ளும் ஒரு செயல்முறையாகும். இது ஒரு அதிசயம் போல் நம்மை உணரவைக்கும். உலகளாவிய மனநல தொற்றுநோயை நிபுணர்கள் கணித்துள்ள நேரத்தில், மன ஆரோக்கியம், உணர்ச்சி, ஸ்திரத்தன்மை மற்றும் சமநிலையை வளர்ப்பதற்கான ஒரு வழிமுறையாகவே தியானத்தை ஐக்கிய நாடுகள் சபை அங்கீகரித்திருப்பது பாராட்டத்தக்கது. இந்த பூமியில் உள்ள ஒவ்வொரு மனிதனும், மனதின் அற்புதத்தை அனுபவிக்க வேண்டும் என்பது எனது விருப்பமும் ஆசீர்வாதமும் ஆகும். இதை நிகழச் செய்வோம். என "சத்குரு" கூறியுள்ளார்.
“டிசம்பர் 21-ஆம் தேதி உலகளாவிய தியான தினமாக அறிவிக்கப்பட்டதன் முக்கியத்துவம் குறித்து சத்குரு வீடியோ ஒன்றில், பேசும் போது "இன்றைய கால கட்டத்தில் மனிதகுலத்தை பாதிக்கும் மிகப்பெரிய சிக்கல்கள் மனநிலை, சமநிலை மற்றும் ஆரோக்கியம் தான் என தெரிவித்துள்ளார்.
அதே போல் மனித மனத்தின் திறன்களை வெளிப்படுத்துவதில் தியானத்தின் பங்கு முக்கியமானது என்றும் அது ஒரு "மிகப்பெரிய அதிசயம்" என்று கூறியுள்ளார், ஆனால் துரதிருஷ்டவசமாக சரியான வழிகாட்டல் இல்லாமல் போன, பலர் இதனை துன்பமாக அனுபவிக்கிறார்கள். "தியானம் என்பது நீங்கள் மனதை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதை கற்றுக்கொடுக்கும் ஒரு செயல்முறை, உங்களுக்குள் அதிசயத்தை தானாக உருவாக்கும் என தியானத்தின் பெருமைகளை எடுத்துரைத்துள்ளார்.
புனித தலங்களை அழிக்க நினைத்தவர்களின் குலமும், வம்சமும் அழிந்துவிட்டது! முதல்வர் யோகி ஆதித்யநாத்!
சத்குரு அடுத்த ஆண்டு 'மிரக்கிள் ஆஃப் மைண்ட்' என்ற செயலியை வெளியிட உள்ளதாகவும், இந்த செயலி எங்கு வேண்டுமானாலும் செய்யக்கூடிய சில எளிய தியான செயல்முறையை வழங்க உள்ளது. இது ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் அமைதி, மகிழ்ச்சி மற்றும் உற்சாகத்தை உணர வைக்கும். இதன் மூலம் மகிழ்ச்சியான, ஆரோக்கியமான மற்றும் உற்சாகமான மனிதர்களின் தலைமுறையை உருவாக்க முடியும் என தெரிவித்துள்ளார். இந்த தகவலை " ஐக்கிய நாடுகள் மற்றும் இந்திய அரசு தியானம் தினம் குறித்து அறிவித்த தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவித்து சத்குரு வெளிப்படுத்தியுள்ளார்.
மகா கும்பமேளா 2025! கொசு, ஈக்களை ஒழிக்க வெக்டர் கட்டுப்பாட்டுப் பிரிவு!
கடந்த மூன்று தசாப்தங்களாக, சத்குரு உலகம் முழுவதும் லட்சக்கணக்கான மக்களுக்கு பயனளிக்கும் யோகம் மற்றும் தியானத்தின் வழிகாட்டல்களை வழங்கி வருகிறார். சத்குருவால் வழி நடத்தப்படும் பல நடைமுறைகளில் ஒன்றான, 12 நிமிட இலவச தியான செயல்முறையான 'ஈஷா கிரியா', சத்குரு செயலியில் அனைவருக்கும் இலவசமாகக் கிடைக்கிறது. இது எண்ணற்ற மக்கள் ஒவ்வொரு நாளும் வாழ்க்கையை மாற்றும் நன்மைகளை அனுபவிக்க உதவுகிறது. சத்குரு மேம்பட்ட தியான திட்டங்களையும் வழங்குகிறார், இதில் 'பூஜ்ஜிய' தியானம் – அதாவது முயற்சி இல்லாமல் ஒரு செயலைச் செய்யும் உள்நோக்கமற்ற செயல்முறை மற்றும் 'சமாயாமா' – பங்கேற்பாளர்கள் உயர்ந்த நிலையை நோக்கி நகர உதவுகிறது. என்பது குறிப்பிடத்தக்கது.