World Bank praises India Do you know

இந்தியா வலிமையுடன் சிறப்பான வளர்ச்சி அடைந்து வருவதாக உலக வங்கி பாராட்டு தெரிவித்துள்ளது.

நியூயார்க்கில் நடைபெற்ற புளூம்பெர்க் சர்வதேச வர்த்தக மாநாட்டில் பேசிய உலக வங்கி தலைவர் ஜிம் யாங் கிம், இந்தியா பொருளாதாரம் சிறப்பான வளர்ச்சி அடைந்து வருவதாக தெரிவித்தார்.

வளரும் நாடுகளுக்கு அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கு அதிக நிதி தேவைப்படுகிறது. அதேபோல கல்வி, மருத்துவம், பருவநிலை சார்ந்த முன்னேற்பாடுகள் ஆகியவற்றுக்கும் அதிக முதலீடு தேவைப்படுகிறது. அதற்காக உலக வங்கி கொடுக்கும் வாய்ப்பை அரசு மற்றும் தனியார் துறையினர் இணைந்து பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.

கடந்த 2016-ம் ஆண்டில் 6.8% ஆக இருந்த இந்திய பொருளாதார வளர்ச்சி நடப்பாண்டில் 7.2% ஆக இருக்கும். விளைபொருள் ஏற்றுமதியாளர்களைவிட இறக்குமதியாளர்கள் சிறப்பாக செயல்பட்டு வருவதால் வளர்ச்சி சீராக இருக்கிறது. ஒவ்வொரு நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மற்றும் கடன் குறித்து உலக வங்கி உன்னிப்பாக கவனித்துவருகிறது என உலக வங்கி தலைவர் ஜிம் யாங் கிம் தெரிவித்தார்.