இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.3 சதவீதமாக குறையும் என உலக வங்கி எச்சரிக்கை விடுத்துள்ளது. 

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.3 சதவீதமாக குறையும் என உலக வங்கி எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக உலக வங்கி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, நடப்பு நிதி ஆண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி என்பது 6.3 சதவீதம் முதல் 6.6 சதவீதமாக இருக்கும். அத்துடன் அதிகளவில் வாங்கப்பட்ட கடனுக்கான செலவுகளால் வாடிக்கையாளர்கள் பாதிக்கப்படுவார்கள். இந்த நிதியாண்டில் 6.3 சதவீதம் முதல் 6.6 சதவீதம் வரை நாட்டின் பொருளாதார வளர்ச்சி இருக்கும் என்று மதிப்பிட்டு இருக்கும் உலக வங்கி, கடந்த நிதியாண்டில் இந்திய பொருளாதார வளர்ச்சி 6.9 சதவீதமாக இருக்கும் என்று கணித்து இருந்தது. 

இதையும் படிங்க: ராஜஸ்தான் முன்னாள், இந்நாள் முதல்வர்களுக்கு கொரோனா.!!

அதேபோல் மொத்த உள்நாட்டு உற்பத்தியான ஜிடிபியின் நடப்பு கணக்கு பற்றாக்குறை என்பது 2.1 சதவீதமாக குறையும் எனவும் உலக வங்கி தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு இது 3 சதவீத என கணிக்கப்பட்டு இருந்தது. சேவைகள் ஏற்றுமதி உயர்வு மற்றும் வணிக பற்றாக்குறை குறைந்ததால் ஜிடிபி பற்றாக்குறை குறைந்துள்ளது. 

இதையும் படிங்க: அதிகரிக்கும் மாரடைப்பு.. மாரடைப்பிற்கும், கொரோனாவிற்கும் தொடர்பு இருக்கா.? மத்திய அரசு பகீர் தகவல்

மேலும் கோவிட் காலத்தில் வழங்கப்பட்ட நிதி ஆதாரங்கள் நிறுத்தப்பட்டதால், அரசின் நுகர்வும் மிக குறைவான வளர்ச்சியை காணும். இதனால், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி அது 6.6 சதவீதத்தில் இருந்து 6.3 சதவீதமாக குறையும். இந்த நிதியாண்டில், இந்தியாவின் பணவீக்கம் 5.2 சதவீதமாக இருக்கும். தற்போது, பணவீக்கம் 6.6 சதவீதமாக உள்ளது குறிப்பிடத்தக்கது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.