Asianet News TamilAsianet News Tamil

உதவும் உள்ளங்களுக்கா...சென்னையில் 2-வது ‘ஐயமிட்டு உண்’ சமுதாய பிரிட்ஜ் தொடக்கம்

wommen doctor started community fridge for poor people
wommen doctor started community fridge for poor people
Author
First Published Jan 1, 2018, 2:54 PM IST


ஆதரவற்றோர்களுக்கு உதவ, காய்ந்த வயிறோடு இருப்பவர்களை பசியாற்றசென்னை பெசன்ட் நகரில் ‘ஐயமிட்டு உண்’ என்ற சமுதாய பிரிட்ஜ் தொடங்கப்பட்டு வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது.

உதவும் உள்ளங்களை இன்னும் அடையாளம் காணும் வகையில், இப்போது சென்னை ஆலந்தூரில் 2-வது ‘ஐயமிட்டு உண்’ சமுதாய பிரிட்ஜ் வைக்கப்பட்டுள்ளது.

பல் அறுவை சிகிச்சை நிபுனரான டாக்டர் இஷா பாத்திமா தனது சொந்த முயற்சியால் பெசன்ட் டென்னிஸ் கிளப் அருகே ஐயமிட்டு உண் என்ற சமுதாய பிரிட்ஜை கடந்த ஆகஸ்ட் மாதம் தொடங்கினார். அதன்பின் பெங்களூரில் தொடங்கினார்.

இதற்கிடையே தீபாவளி பண்டிகையின் போது, ஆயிரம் குடும்பங்களுக்கு உதவும் திட்டத்தை தொடங்கினார். இதற்காக ‘ஹேப்பிபிளேட்சென்னை’(#happyplatechennai) என்ற பெயரில் பிரசாரம் தொடங்கினார்.தீபாவளி நேரத்தில் ஆதரவு அற்ற ஏழை குடும்பங்களுக்கு உணவுப் பொருட்களை இலவசமாக வழங்கி தனது சேவை கரத்தை விரிவு படுத்தினார்.

இவர் தொடங்கிய முத்தாய்ப்பான ‘ஐயமிட்டு உண்’ என்ற சமுதாய பிரிட்ஜ் உதவ நினைக்கும் உள்ளங்களுக்காக உருவாக்கப்பட்டது.

மக்கள் தங்களிடம் இருக்கும் உணவுகள், பழங்கள், பிஸ்கெட், குடிநீர் பாட்டில், ஆடைகள் என எது வேண்டுமானாலும், அந்த பிரிட்ஜில் வைத்துச் செல்லலாம். தேவை உள்ளவர்கள் யாரையும் கேட்காமல் அந்த பிரிட்ஜை திறந்து எடுத்துக்கொள்ளலாம். காலை 9 மணி முதல் மாலை 7 மணி வரை இந்த பிரிட்ஜ் திறந்திருக்கும்.

இந்த பிரிட்ஜுக்கு ஏற்கனவே சென்னையின் பெரும்பாலான பகுதிகளில் இருந்து மக்கள் தாமாக முன்வந்து உதவி வருகிறார்கள். இதன் மூலம் தேவை உள்ள மக்கள் தங்களின் பசியை போக்கிக் கொள்கிறார்கள், உடைகளையும், பொருட்களையும் எடுத்துச் செல்கிறார்கள்.

ஆனால், சென்னையின் புறநகர் பகுதிகளில் இருப்பவர்கள் தங்களால் இயன்ற உதவிய வழங்க முடியவில்லையே என வருத்தமும் இருந்து வந்தது. அந்த வருத்தத்தை கடந்த 27-ந்தேதி இஷா பாத்திமா தீர்த்து வைத்துள்ளார்.

சென்னை ஆலந்தூரில் உள்ள மலபார் முஸ்லிம் ஹாஸ்டல் அருகே, கருநீகர் தெருவில் 2-வது ஐயமிட்டு உண் சமுதாய பிரிட்ஜ் தொடங்கி உதவும் உள்ளங்களுக்கு வலு சேர்த்துள்ளார் இஷா பாத்திமா.

கடந்த 27-ந்தேதி முதல் ஆலந்தூரில் தொடங்கப்பட்டுள்ள இந்த ஐயமிட்டு உண் பிரிட்ஜ் காலை 7மணி முதல் 9மணி வரை திறந்து இருக்கிறது. உதவ நினைக்கும் உள்ளங்கள், தங்களால் இயன்ற பொருட்களை, உணவுகளை, உடைகளை, புத்தகங்கள்  இதில் வைத்து தேவைப்படுவோர்க்கு உதவலாம்.

இஷா பாத்திமா வின் சேவை இன்னும் தொடரட்டும்...

Follow Us:
Download App:
  • android
  • ios