women police left right questions to bjp partys in uttarpradesh
உத்தரப்பிரதேசத்தில் பாஜக தொண்டர் ஒருவரை விடுவிக்கக் கோரி போராட்ட்த்தில் ஈடுபட்ட பாஜகவினரிடம் பெண் போலீஸ் அதிகாரி ஒருவர் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்திர பிரதேசத்தில் சில நாட்களுக்கு முன்பு பாஜக தொண்டர் ஒருவர் திய ஆவணங்கள் இல்லாமல் வாகனத்தை ஓட்டி வந்துள்ளார்.
அப்போது அங்கு வாகன சோதனையில் ஈடுபட்ட போலீசார் வண்டியின் ஆவணங்கள் எங்கே என கேள்வி எழுப்பி உள்ளனர்.
அதற்கு அந்த பாஜக தொண்டர் போலீசாரிடம் தவறாக நடந்து கொண்டதாக தெரிகிறது. இதனால் அந்த பாஜக தொண்டரை போலீசார் கைது செய்தனர்.
இன்னிலையில் இன்று அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும்போது, சக பாஜக தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதைப்பார்த்த அங்கிருந்த போலீசார் அவர்களை சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர். அப்போது சரக காவல் அதிகாரி ஸ்ரேஷ்தா தாகூரை, பாஜகவினர் ஆத்திரத்தோடு சூழ்ந்து கொண்டு சண்டையிட்டனர்.
இதனால் கடும் கோபம் கொண்ட அந்த பெண் போலீஸ் ஆவணம் இல்லாமல் வாகனம் ஓட்டினால் நடவடிக்கை எடுக்கக் கூடாது என முதலமைச்சரிடம் சென்று உத்தரவு நகல் வாங்கி வருமாறும், அவ்வாறு செய்தால் கைது செய்தவரை விடுவிப்பதாகவும் தெரிவித்தார்.
இதை கேட்ட அங்கிருந்த பாஜக தொண்டர்கள் ஒரு நிமிடம் உரைந்து போய் விட்டனர்.
