அந்த 12 பேரையும் அந்த பெண்களின் கோரிக்கையை ஏற்று அங்கேயே விட்டு சென்றுள்ளனர்
கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக மணிப்பூர் மாநிலத்தில் நடந்து வருகின்ற வன்முறைகள் இடைவெளி இன்றி தொடர்ந்து வருகின்றது. இதுவரை இந்த வன்முறைகளில் சிக்கி நூற்றுக்கும் அதிகமான பொதுமக்கள் இறந்துள்ளனர். அதே சமயம் தங்கள் சொந்த நிலத்தை விட்டு பல்லாயிரக்கணக்கான மக்கள் வெளியேறி வரும் அவலமும் ஏற்பட்டு வருகிறது.
அகதிகளாக எங்கே செல்வது என்று தெரியாமல், உயிரை காத்துக்கொள்ள மக்கள் மணிப்பூரில் இருந்து புறப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் தொடரும் இந்த துயரத்திற்கு ஒரு தீர்வினைக்கான தற்பொழுது மணிப்பூரில் 40 ஆயிரத்திற்கும் அதிகமான பாதுகாப்பு படையினர் களமிறக்கப்பட்டுள்ளனர் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
இதையும் படியுங்கள் : பொதுமக்களுக்கு டீ.. அசத்திய மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி!
ஆனால் அதே சமயம் அங்கு நடக்கும் கலவரங்களை அடக்க வரும் பாதுகாப்பு படையினர் மேற்கொள்ளும் அத்தனை முயற்சிகளுக்கும் முட்டுக்கட்டையாகவும், வன்முறை கும்பலுக்கு ஆதரவாகவும் தற்பொழுது மணிப்பூரில் உள்ள பல பெண்களே களத்தில் இறங்கியுள்ளதால் இதை கண்ட ராணுவ வீரர்களும், பாதுகாப்பு அதிகாரிகளும் அதிர்ந்து போய் உள்ளனர்.
மணிப்பூரில் உள்ள ஒரு பகுதியில் வன்முறையில் ஈடுபட்ட சிலரை பாதுகாப்பு படையினர் கைது செய்து சென்றனர். இந்த செயல் நடந்த ஒரு சில மணி நேரத்தில் அந்த பாதுகாப்பு படையினர் செல்லும் வழியில் நூற்றுக்கணக்கான பெண்கள் இணைந்து அவர்கள் மேற்கொண்டு செல்லமுடியாமல் வழி மறித்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இருப்பினும் பாதுகாப்பு அதிகாரிகள் எந்த கடும் நடவடிக்கையும் மேற்கொள்ளாமல், அந்த 12 பேரையும் அந்த பெண்களின் கோரிக்கையை ஏற்று அங்கேயே விட்டு சென்றுள்ளனர். இது குறித்து இந்திய ராணுவத்தின் ஒரு துறை வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில். பொதுமக்களும் எங்களுக்கு ஆதரவு அளித்தால் மட்டுமே எங்களால் மணிப்பூரை மீண்டும் இயல்பு நிலைக்கு கொண்டு வர முடியும், எனவே தயவுகூர்ந்து உங்களுக்கு உதவ எங்களுக்கு உதவுங்கள் என்று கூறியுள்ளது.
இதையும் படியுங்கள் : திருப்பதி டீக்கடை பேப்பர் கப்பில் சிலுவை சின்னம்.. வேதஸ்தானம் அதிரடி நடவடிக்கை
