ரயில்கள் மற்றும் பேருந்துகளில் பயணம் செய்யும் பெண் பயணிகளிடம் அத்துமீறி நடந்து கொள்ளும் சம்பவங்கள் நிகழ்ந்து கொண்டுதான் உள்ளன.

கேரளாவில், தனியார் பேருந்து ஒன்றில் பயணம் செய்த அன்னி (29) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் திருவனந்தபுரத்தில் இருந்து மாலாபுரத்திற்கு தனியார் பேருந்து ஒன்றில் பயணம் செய்ய காத்திருந்தார். அப்போது பேருந்து நடத்துனர், அன்னியின் பக்கத்து இருக்கையில், பெண் பயணி ஒருவர் ஏறுவார் என்று அன்னியுடம் கூறியுள்ளார்.

சுமார் 8 மணி நேரம் பயணம் செய்து கொண்டிருந்த நன்றாக தூங்கிக் கொண்டு வந்துள்ளார். அப்போது, தன் மீது, யாரோ ஒருவர் தொடுவது போன்று இருந்துள்ளதை அடுத்து, பதறி அடித்து எழுந்துள்ளார். அப்போது பேருந்து விளக்குகள் எரியாததால், அவர் யார் என்பது தெரியவில்லை என்று அன்னி கூறினார்.

இந்த சம்பவம் குறித்து பேருந்து நடத்துனரிடம் கேட்டபோது, அவர் தெளிவான பதிலளிக்க வில்லை என்றும் இதனால் சந்தேகமடைந்த அன்னி, மாலாபுரம் காவல் நிலையத்திற்கு தொடர்பு கொண்டு புகார் தெரிவித்துள்ளார். 

பேருந்து மாலாபுரம் வந்த பின்னர் அன்னி, திருவனந்தபுரம் டிஜிபி மற்றும் கமிஷனரிடம் புகார் அளித்துள்ளார். அன்னி கூறியதை அடுத்து, மேலும் சில பெண்கள் தங்களுக்கும் இதுபோன்று நடந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இது குறித்த பேசிய அன்னி, பெண்கள் தங்களுக்கு நடக்கும் பிரச்சனைகளைப் பற்றி வெளியே சொல்ல பயப்படுகிறார்கள். தனக்கு பாதுகாப்பு இருக்காது என்றும் அவர்கள் கருதுவதாக அன்னி கூறினார்.

இதனை அடுத்து, பேருந்து ஓட்டநர் மற்றும் நடத்துநர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.