Woman who waited for 18 years to conceive dies after giving birth to twin

திருமணமாகி 18 வருடங்களுக்குப் பிறகு பிறந்த இரட்டை பெண் குழந்தைகளை பார்க்காமலேயே பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கேரளாவில் ஒரு பெண்ணுக்குத் திருமணமானவுடன் குழந்தை பிறக்க வேண்டும். அதுதான் அவளுக்குத் தனிப்பட்ட மகிழ்ச்சியையும், இருவீட்டாரிடமும் நெருக்கத்தையும் உண்டாக்கும். ஆனால், அப்படி குழந்தை பாக்கியம் இல்லையென்றால், அந்த பெண் சந்திக்கும் பிரச்சனைகள் ஏராளம். பார்ப்பவர்கள் எல்லாம் அந்த பெண்ணை மலடி மலடி என குறை கூறுவார்களே தவிர, அந்த ஆண் மீது பழியும் சொல்ல மாட்டார்கள். 

இந்நிலையில், கேரள மாநிலம் கோட்டயத்தை சேர்ந்தவர் சசிபாலன். அவரது மனைவி ஷீபா. இவர்களுக்கு திருமணமாகி 19 வருடங்கள் ஆகிறது. குழந்தை பாக்கியம் இல்லை. குழந்தை வேண்டி தம்பதியினர் கோவில், மருத்துவமனை என கடந்த வருடங்களாக அலைந்து கொண்டிருந்தனர் ஆனால் குழந்த பாக்கியம் கிடைக்கவில்லை.

இதனையடுத்து கடந்த ஆண்டு ஷீபா கர்ப்பம் தரித்தார். நேற்று முன்தினம் ஷீபாவுக்கு பிரசவ வலி ஏற்பட்டது. ஷீபா கேரளாவிலுள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார். சுகபிரசவத்திற்கு வாய்ப்பில்லை என்று தெரிந்த பின்னர் ஷீபாவுக்கு ஆபரேசன் செய்யப்பட்டது. ஆபரேசன் மூலம் இரட்டை பெண் குழந்தைகளை பிறந்தது. குடும்பத்தினர் உறசாகத்தில் கொண்டாடி வந்தனர். 

ஆனால் அவர்களின் சந்தோஷம் நீண்ட நேரம் நிலைக்கவில்லை. இரட்டை குழந்தையை பெற்றெடுத்த ஷீபா அதிக ரத்தப்போக்கால் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு நேற்று மாலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். பல வருடனகலாக குழந்தை இல்லாமல் சந்தோஷத்தை இழந்து இருந்த ஷீபா, குழந்தைகளை பார்க்காமலேயே உயிர் பிரிந்தது உறவினர்கள் மற்றும் நண்பர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.