நடு ஆற்றில் நடந்த அதிசய பெண்.. கடவுளை பார்க்க குவிந்த பொதுமக்கள் - கடைசியில் நடந்த ட்விஸ்ட்
ஜபல்பூரில் உள்ள நர்மதா நதியின் ஆழமற்ற நீரில் நடந்து செல்வதைக் கண்ட பெண் தான் தற்போது ட்ரெண்டிங் டாபிக் ஆக இருக்கிறது.
சமூக வலைதளங்களில் தவறான வீடியோ வைரலானது புதிதல்ல. ஆனால் சில நேரங்களில் தவறான வீடியோக்கள் நம்பிக்கைக்கும், மூடநம்பிக்கைக்கும் இடையிலான இடைவெளியைக் குறைக்கின்றது என்றும் சொல்லலாம். ஜபல்பூர் நகரிலும் இதுபோன்ற ஒரு சம்பவம் நடந்துள்ளது.
இரண்டு நாட்களுக்கு முன், நர்மதா நதியில் வயதான பெண் நடந்து செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இதை அதிசயம் என்று நம்பி அந்த பெண்ணை பார்க்க மக்கள் திரண்டனர். அந்த பெண் நர்மதா தேவி என்ற செய்தி சமூக வலைதளங்களில் தீயாக பரவியது. ஆயிரக்கணக்கான மக்கள் அந்தப் பெண்ணைப் பின்தொடர்ந்தனர்.
இதையும் படிங்க..திருப்பூரில் தயாரான பிரதமர் மோடியின் டீ சர்ட்..இதை கவனிச்சீங்களா.? அப்படி என்ன ஸ்பெஷல்.!!
அந்தப் பெண் ஆழமற்ற நீரில் நடந்து கொண்டிருந்தாள். ஆனால் அந்த வீடியோவில் நர்மதா தேவியின் வடிவம் தண்ணீரில் ஓடுவதாக விளம்பரம் செய்யப்பட்டது. இதையடுத்து அந்த பெண்ணை பார்க்க மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. தற்போது மூதாட்டியின் உண்மை வெளியே வந்துள்ளது. அந்த பெண்ணின் பெயர் ஜோதி பாய் ரகுவன்ஷி என்றும், இவருக்கு வயது 51 என்றும் கூறப்படுகிறது. ஜோதி பாயின் மனநிலை சரியில்லை என்று அவரது மகன் கடந்த மே மாதம் புகார் அளித்திருந்தார்.
ஜோதிபாய் ரகுவன்ஷியை பாதுகாப்பதற்காக போலீசார் கைது செய்துள்ளனர். மதம் மற்றும் நம்பிக்கையின் பெயரால், சமூக வலைதளங்களில் பொய்ப் பிரச்சாரம் மற்றும் மூடநம்பிக்கை வீடியோக்கள் கடுமையாகப் பரப்பப்படுகின்றன. பொதுமக்களாகிய நாம் தான் பொய் செய்திகளை கடந்து செல்ல வேண்டும் என்று காவல்துறை அறிவுறுத்தி உள்ளது.
இதையும் படிங்க..லெஜன்ட் சரவணன் உடன் நடிக்க சென்ற மணிமேகலை... குக் வித் கோமாளியை விட்டு விலகியது இதுக்குத்தானா?