ஈரான் சிறைபிடித்த கப்பலில் இருந்த இந்தியப் பெண் பத்திரமாக வீடு திரும்பினார்: வெளியுறவுத்துறை
ஈரான் நாட்டினரால் சிறை பிடிக்கப்பட்ட சரக்குக் கப்பலின் பணியாளர் குழுவில் இருந்த இந்திய பெண் மாலுமி ஒருவர் பத்திரமாக வீடு வந்து சேர்ந்ததாக வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.
ஏப்ரல் 13ஆம் தேதி ஹார்முஸ் ஜலசந்தி அருகே ஈரான் நாட்டினரால் சிறை பிடிக்கப்பட்ட சரக்குக் கப்பலின் பணியாளர் குழுவில் இருந்த இந்தியர்களில் ஒரு பெண் மாலுமி பத்திரமாக வீடு வந்து சேர்ந்ததாக வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
"தெஹ்ரானில் உள்ள இந்திய மிஷன் மற்றும் ஈரானிய அரசாங்கத்தின் ஒருங்கிணைந்த முயற்சிகளுடன், எம்.எஸ்.சி ஏரீஸ் என்ற சரக்குக் கப்பலின் இந்தியக் குழு உறுப்பினர்களில் ஒருவரான கேரளாவின் திருச்சூரைச் சேர்ந்த ஆன் டெஸ்ஸா ஜோசப், கொச்சி சர்வதேச விமான நிலையத்தில் பத்திரமாக தரையிறங்கினார்" என வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
"தெஹ்ரானில் உள்ள இந்திய தூதரகம் கப்பலில் மீதமுள்ள 16 இந்திய பணியாளர்களுடன் தொடர்பில் உள்ளது. குழு உறுப்பினர்கள் நல்ல ஆரோக்கியத்துடன் உள்ளனர். இந்தியாவில் உள்ள அவர்களது குடும்ப உறுப்பினர்களுடனும் தொடர்பில் உள்ளோம்" என்று வெளியுறவுத்துறையின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்னும் கப்பலில் உள்ள இந்தியர்களின் நலனை உறுதி செய்வதற்காக ஈரானிய அதிகாரிகளுடன் இந்தியாவும் தொடர்பில் இருப்பதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.
முன்னதாக, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அமீர் அப்துல்லாஹியனிடம் இந்த விவகாரம் குறித்துப் பேசியுள்ளார்.
தேர்தல் நாளில் விடுமுறை மறுப்பு! பிளிப்கார்ட், பிக் பாஸ்கெட் நிறுவனங்கள் மீது புகார்!
மரத்தைக் கட்டிப் பிடிக்க ரூ.1500 கட்டணமா? பெங்களூரு நிறுவனத்தை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்!