மைசூரில் பெண் ஒருவர் தன் கணவர் மற்றும் சாமியார் மீது பாலியல் புகார் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மைசூருவில் மகா காளி சக்ரேஸ்வரி த்ரிதாம சேத்ரம் பீடத்தில் வித்தியா ஹம்சபாரதிய சாமிகள் நிர்வாகம் செய்து வருகிறார். கடந்த வாரம் பாண்டவபுரா அருகே சிறப்பு பூஜை நடைபெற்றது. அப்போது இந்த பூஜையில் சாமியாரின் தீவிர பக்தரான ஒருவர் மனைவியை அழைத்து வந்துள்ளார். 

அவரது மனைவியிடம் சாமியார் மிகவும் நல்லவர் என்றும், அவர் கேட்டுகும் உதவியை செய்து தர வேண்டும் என்று கணவர் கூறியுள்ளார். ஆனால் அந்த பெண் கணவரின் கோரிக்கையை ஏற்க மறுத்துவிட்டார். சாமியரையும் பார்க்க மறுத்துவிட்டார். இதனையடுத்து வீட்டில் இருந்த போது நள்ளிரவில் அழைப்பு மணி சத்தம் கேட்டு கதவை திறந்தார். அப்போது அவரது கணவர் மற்றும் சாமியார் உள்பட 5 பேருடன் வீட்டுக்கு வந்துள்ளார். இதை கண்டு மனைவி அதிர்ச்சியடைந்தார். பின்பு உள்ளே வந்த சாமியார் பெண்ணின் தலைமுடியை பிடித்து இழுத்து என்னை சந்திக்க மடத்துக்கு வரமாட்டாயா என்று மிரட்டல் விடுத்தார். 

மேலும் அந்த பெண்ணின் அந்தரங்க உறுப்புகளில் கைவைத்து பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டுள்ளார். பிறகு தெய்வீக பிறவி, சான் சொல்வதை கேட்க மாட்டாய என்று கூறினார். பிறகு அறையில் தள்ளி பெண்ணிண் ஆடைகளை களைத்து அவைகளுக்கு தீ வைத்தார். பின்னர் தனது காரில் வலுக்கட்டாயமாக அப்பெண்ணை  ஏற்றிக்கொண்டு மடியில் அமரவைத்துக் கொண்டுள்ளார். 

மேலும் 3 நாட்களுக்குள்  தனக்கு சேவை செய்ய வரவில்லை என்றால் கொன்றுவிடுவேன் என்று சாமியார் மிரட்டியதாக அந்த பெண் புகார் தெரிவித்துள்ளார்.  இதையடுத்து போலீசார் சாமியார் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.