Wipro: விப்ரோ நிறுவனத்தில் 8,000 புதியவர்களுக்கு வேலை!
முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான விப்ரோ கேம்பஸ் இன்டர்வியூ மூலம் 8,000 புதிய ஊழியர்களை பணி அமர்த்த உள்ளது.
விப்ரோ நிறுவனம் அடுத்த மூன்று மாதங்களில் சுமார் 8 ஆயிரம் புதியவர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க உள்ளதாகக் கூறியுள்ளது. கல்வி நிறுவனங்களில் இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கு கேம்பஸ் இன்டர்வியூ நடத்தி தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இது இந்த ஆண்டு படிப்பை முடிப்பவர்களுக்கு இது மிகப்பெரிய வாய்ப்பாக அமைய உள்ளது.
இந்தப் புதிய வேலை வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள விரும்புவோர் விப்ரோ நிறுவனத்தின் careers.wipro.com என்ற இணையதளத்தை கவனமாகப் பின்தொடர வேண்டும். இணையதளத்தில் வெளியாகும் அறிவிப்பை பார்த்து அதன்படி விண்ணப்பிக்கலாம்.
விப்ரோ நிறுவனம் இந்தியாவின் நான்காவது பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனம் ஆகும். தொடர்ந்து லாபகரமாக இயங்கிவரும் இந்நிறுவனம் நடப்பு நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில் 30.5 பில்லியன் லாபம் ஈட்டியிருக்கிறது.
பூரி ஜகந்நாதர் கோயில் கருவறையில் எலிகள் அட்டகாசம்!
இச்சூழலில், நிறுவனத்தின் வளர்ச்சியை மேலும் அதிகரிக்கும் நோக்கில் புதிய ஊழியர்கள் தேவைப்படுவதாக அந்நிறுவனம் கூறியுள்ளது. அதன்படி, வரும் காலாண்டில் புதிய பணியாளர்களை தேர்ந்தெடுப்பதற்கான நடவடிக்கையை விப்ரோ நிறுவனம் முன்னெடுக்க உள்ளது.
மற்றொரு முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனமான டி.சி.எஸ். 2024ஆம் ஆண்டிற்குள் 1.25 லட்சம் புதிய ஊழியர்களை பணியமர்த்த உள்ளதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து விப்ரோ நிறுவனமும் 8 ஆயிரம் பேருக்குப் பணி வாய்ப்பு உள்ளதாகச் சொல்லியிருக்கிறது. இது தொழில்நுட்பத் துறையில் புதிதாகப் பட்டம் பெற்று வேலைக்குத் தயாராக உள்ள இளைஞர்களுக்கு வரப்பிரசாதமாக அமைய உள்ளது.