Asianet News TamilAsianet News Tamil

நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் டிசம்பர் 4ஆம் தேதி தொடங்கும்: அமைச்சர் பிரஹலாத் ஜோஷி தகவல்

நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத்தொடர் டிசம்பர் 4ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 22ஆம் தேதி வரை 19 நாட்கள் நடைபெறும் என்று மத்திய அமைச்சர் பிரஹ்லாத் ஜோஷி அறிவித்துள்ளார். 

Winter Session, 2023 of Parliament will commence on Dec 4 says Minister Pralhad Joshi sgb
Author
First Published Nov 9, 2023, 6:15 PM IST | Last Updated Nov 9, 2023, 7:19 PM IST

நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத்தொடர் டிசம்பர் 4ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 22ஆம் தேதி வரை 19 நாட்கள் நடைபெறும் என்று நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பிரஹ்லாத் ஜோஷி அறிவித்துள்ளார். இந்தக் கூட்டத்தொடர் 15 அமர்வுகள் கொண்டதாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அமைச்சர் பிரஹ்லாத் ஜோஷி, "நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத்தொடர், 2023 டிசம்பர் 4ஆம் தேதி தொடங்கி, டிசம்பர் 22ஆம் தேதி வரை 19 நாட்கள் நடைபெறும். 15 அமர்வுகளைக் கொண்டிருக்கும். அமிர்த காலத்தில் நடக்கும் அமர்வுகளின் போது நாடாளுமன்ற அலுவல் மற்றும் பிற விஷயங்கள் பற்றிய விவாதங்களை எதிர்பார்க்கிறோம்" என்று தெரிவித்துள்ளார்.

ஒரு காருக்குள் இத்தனை வசதியா! EV மார்க்கெட்டில் மிரட்டலான என்டரி கொடுத்த லோட்டஸ்!

இந்திய தண்டனைச் சட்டம் (IPC), குற்றவியல் நடைமுறைச் சட்டம் (CrPC) மற்றும் இந்திய சாட்சியச் சட்டம் ஆகியவற்றை மாற்றுவதற்கான மூன்று முக்கிய மசோதாக்கள் குளிர்காலக் கூட்டத்தொடர் அமர்வின் போது பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று தெரிகிறது.

தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்கள் நியமனம் தொடர்பான மற்றொரு முக்கிய மசோதாவும் நாடாளுமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது. இதுவும் இந்தக் கூட்டத்தொடரில் விவாதத்துக்கு வரும் என்று எதிர்பார்க்கலாம்.

இந்த ஆண்டு நாடாளுமன்றத்தின் கடைசி கூட்டத் தொடராக அமையும் இந்தக் கூட்டத்தொடர், கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முன்னதாக குளிர்கால கூட்டத்தொடர் முடிவடைகிறது.

எந்த விஷயத்திலும் இந்தியா சுதந்திரமாக முடிவு எடுக்கலாம்! சிக்னல் கொடுத்த வெள்ளை மாளிகை!

 
Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios