Asianet News TamilAsianet News Tamil

PS Chauhan: மகன் உயிரிழந்த செய்தியை அறிந்து மயங்கிய விழுந்த தாய்.. குடும்பத்தாரிடம் பேசிய கடைசி உரையாடல்..!

முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் பயணித்த ஹெலிகாப்டரை இயக்கிய விமானி பி.எஸ். சவுகான் தனது குடும்பத்தினருடன் கடைசியாக உரையாடிய தகவல் வெளியாகியுள்ளது. 

Wing Commander PS Chauhan Last Conversation With Family
Author
Uttar Pradesh, First Published Dec 9, 2021, 2:58 PM IST

முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் பயணித்த ஹெலிகாப்டரை இயக்கிய விமானி பி.எஸ். சவுகான் தனது குடும்பத்தினருடன் கடைசியாக உரையாடிய தகவல் வெளியாகியுள்ளது. 

நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியில் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் உள்பட 14 பேர் சென்ற ஹெலிகாப்டர் நேற்று விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி  உள்பட 13 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். ஹெலிகாப்டரை இயக்கிய விமானப்படை கேப்டன் வருண் சிங் 80 சதவீத படுகாயங்களுடன் ராணுவ மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Wing Commander PS Chauhan Last Conversation With Family

முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் உள்பட 14 பேர் சென்ற  எம்.ஐ-17 வி5 ரக ஹெலிகாப்டரின் தலைமை பைலட் தான் பி.எஸ். சவுகான். உத்தரப்பிரதேச மாநிலத்தின் ஆக்ராவைச் சேர்ந்த அவர் தனது தாயார் சுசிலா சவுகானுடன் கடைசியாக, விபத்து நடந்த முந்தைய நாள் இரவு தொலைபேசியில் பேசியுள்ளார். ஆனால், அதுவே தனது குடும்பத்தினருடனான அவருடைய கடைசி உரையாடலாக மாறி இருக்கிறது.

Wing Commander PS Chauhan Last Conversation With Family

இந்நிலையில், மறுநாள் மதியம் கோவை மாவட்டம் சூலூரில் இருந்து பி.எஸ்.சவுகான் ஓட்டிச் சென்ற ஹெலிகாப்டர், நீலகிரி மாவட்ட வனப்பகுதியில் மோதி விபத்துக்குள்ளானது. தொலைக்காட்சிகளில் பரபரப்பாக ஒளிபரப்பாகிக் கொண்டிருந்ததை அவரது தாயார் பார்த்துள்ளார். அப்போது, இந்த ஹெலிகாப்படர் விபத்தில் யாரும் பிழைத்திருக்க வாய்பில்லை என்ற செய்தியை அறிந்ததும் அவரின் தாயார் சுசிலா மயங்கி விழுந்துள்ளார். இதனையடுத்து, அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு நலமாக உள்ளார். இந்த கோர விபத்தில் உயிரிழந்த விங் கமாண்டர் பி.எஸ்.சவுகானுக்கு மனைவி 12 வயதில் மகள் மற்றும் 9 வயதில் ஒரு மகன் உள்ளனர். 

மறைந்த சவுகானின் மூத்த சகோதரிகளுள் ஒருவரான மினா சிங் கூறுகையில்;- 30 வருடங்களுக்கு பிறகு  இந்த ஆண்டு ரக்‌ஷா பந்தனுக்கு தான் அனைவரும் ஒன்றாக இருந்தோம் என கண்ணீர் மல்க கூறியுள்ளார். 

Follow Us:
Download App:
  • android
  • ios