Asianet News TamilAsianet News Tamil

பெண்கள் நுழைந்தால் சபரிமலைக்கு பூட்டுதான்... எச்சரிக்கை விடுத்த தலைமை அர்ச்சகர்!

சபரிமலைக் கோயிலுக்கு பெண்கள் வந்தால், கோயிலைப்பூட்டி சாவியை ஒப்படைத்துவிட்டு செல்லப்போவதாகவும், பக்தர்களுக்கு ஆதரவாக இருப்பதைத் தவிர எனக்கு வேறு வழியில்லை என்று தலைமை அர்ச்சகர் கண்டரரு ராஜீவரு அதிர்ச்சி தெரிவித்துள்ளார்.

Will shut Sabarimala temple if women are allowed... head priest
Author
Kerala, First Published Oct 19, 2018, 4:30 PM IST

சபரிமலைக் கோயிலுக்கு பெண்கள் வந்தால், கோயிலைப்பூட்டி சாவியை ஒப்படைத்துவிட்டு செல்லப்போவதாகவும், பக்தர்களுக்கு ஆதரவாக இருப்பதைத் தவிர எனக்கு வேறு வழியில்லை என்று தலைமை அர்ச்சகர் கண்டரரு ராஜீவரு அதிர்ச்சி தெரிவித்துள்ளார். Will shut Sabarimala temple if women are allowed... head priest

 சபரிமலை ஐயப்பன் கோயில் சந்நிதானம் கிட்டத்தட்ட போர்க்களமாகவே மாறிப்போயுள்ளது. உச்சநீதிமன்ற தீர்ப்பை அடுத்து, சபரிமலைக்கு பெண்கள் வருகை தந்த நிலையில், அவர்களுக்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. ஆந்திராவைச் சேர்ந்த மாதவி, இரண்டு குழந்தைகளுடன் சபரிமலைக்கு வந்தபோது, அவர்களுக்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு, தடுத்து நிறுத்தப்பட்டார். இதன் பின் லிபி என்ற பெண் செய்தியாளர் இருமுடி கட்டுகளுடன் சபரிமலை வந்தார். Will shut Sabarimala temple if women are allowed... head priest

அவரையும் பக்தர்கள் தடுத்து நிறுத்தினர். செய்தியாளர் கவிதா, ரஹானா ஆகியோர் இன்று காலை சபரிமலை சந்நிதானத்துக்கு மிக அருகில் சென்ற நிலையில், அவர்களுக்கு தந்திரிகள், நம்பூதிரிகள், பக்தர்கள் என பலர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், பதினெட்டாம்படி அருகில் தந்திரிகள் பக்தர்கள் நின்று கொண்டு போராட்டம் நடத்தினர். Will shut Sabarimala temple if women are allowed... head priest

தற்போது சபரிமலையில் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் சபரிமலை ஐயப்பன் கோயிலைப் பூட்டி சாவியை ஒப்படைக்க முடிவு 
செய்துள்ளதாகத் தலைமை அர்ச்சகர் கண்டரரு ராஜீவரு தெரிவித்துள்ளார். சபரிமலை கோயிலுக்கு பெண்கள் வந்தால், கோயில் அடைக்கப்படும்; கோயிலைப் பூட்டி, சாவியை ஒப்படைத்து விட்டுச் செல்ல முடிவு செய்துள்ளோம். ஐயப்ப பக்தர்களுக்கு ஆதரவாக இருப்பதைத் தவிர எனக்கு வேறு வழியில்லை என்று தலைமை அர்ச்சகர் தெரிவித்துள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios