மக்களவை தேர்தலில் காங்கிரஸ் 40 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற்றுவிட்டால் பிரதமர் மோடி தூக்கில் தொடங்கத் தயாரா என மல்லிகார்ஜூன கார்கே கேள்வி எழுப்பி உள்ளார்.

  

கடந்த ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில் காங்கிரஸ் 44 இடங்களை பெற்றிருந்த நிலையில், இந்த தேர்தலில் அந்த கட்சி 40 தொகுதிகள் கூட வெல்ல முடியாது என பிரதமர் மோடி கூறினார். இதற்கு மக்களவை காங்கிரஸ் மூத்த தலைவரான மல்லிகார்ஜூன கார்கே நேற்று பதிலடி கொடுத்துள்ளார். இந்நிலையில், கர்நாடகாவில் தேர்தல் பிரச்சாரத்தின் போது இது தொடர்பாக அவர் கூறுகையில், இந்தியா என்பது காங்கிரஸ் கட்டிய வீடு, அந்த வீட்டில் அமர்ந்து கொண்டு காங்கிரஸ்காரர்கள் யார் என பிரதமர் மோடி கேள்வி எழுப்புகிறார். 

 நாட்டின் எதிர்காலத்தை எழுதப்போகிறவர்கள் இங்கிருக்கும் மக்களாகிய நீங்கள்தான். இந்த தொகுதியின் வேட்பாளரான சுபா‌‌ஷ் மற்றும் எங்களைப் போன்றவர்களின் எதிர்காலம் உங்கள் கையில்தான் இருக்கிறது. அது மோடியிடமோ அல்லது பா.ஜ.க.விடம் இல்லை என விமர்சனம் செய்தார். காங்கிரஸ் 40 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறாது என செல்லும் இடமெல்லாம் மோடி கூறி வருகிறார். அப்படி வெற்றிபெற்றால் டெல்லி விஜய் சவுக்கில் அவர் தூக்கில் தொங்க தயாரா என்றும் மல்லிகார்ஜுன கார்கே கேள்வி எழுப்பினார். இவரது பேச்சுக்கு பாஜக தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.