தெலங்கானா மாநிலத்தில் பாஜக அதிக இடத்தை பிடித்து ஆட்சி அமைத்தால், ஐதராபாத் பெயரை மாற்றுவோம் என பாஜக வேட்பாளர் தெரிவித்துள்ளார்.

பல்வேறு போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், உண்ணாவிரதம் நடத்தி ஆந்திர மாநிலத்தில் இருந்து தெலங்கானா மாநிலத்தை பிரித்தனர். இதைதொடர்ந்து சந்திரசேகரராவ் முதல்வராக பதவியேற்று ஆட்சி அமைத்தார். 

இந்நிலையில், தெலுங்கானா சட்டமன்ற இடைத் தேர்தலில் பாஜக அதிக இடங்களில் வெற்றி பெற்று,  மாநிலத்தின் வளர்ச்சியே தங்களின் முதல் நோக்கம் என கூறிய பாஜக எம்எல்ஏ ராஜாசிங்,  அடுத்தபடியாக ஐதராபாத் பெயர் பாக்யநகர் என மாற்றப்படும் என்று தெரிவித்துள்ளார். தெலுங்கானாவில் வரும் டிசம்பர் 7-ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி, பா.ஜ.க. எம்எல்ஏ ராஜா சிங் கூறுகையில், 1590 ல் அலி குதுப் ஷா பாக்யநகர் என்ற பெயரை ஐதராபாத் என மாற்றினார். 

தற்போது பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் ஐதராபாத் என்ற பெயர் மாற்றப்பட்டு, மீண்டும் பாக்யநகர் என மாற்றப்படும். இதே போன்று செகந்திராபாத் மற்றும் கரீம்நகர் ஆகியவற்றின் பெயர்களும் மாற்றப்படும். முகலாயர்கள் மற்றும் நிஜாம்கள் காலத்தில் மாற்றப்பட்ட பெயர்களும் தெலுங்கானாவுக்காகவும், நாட்டுக்காகவும் போராடியர்களின் பெயர்களாக மாற்றப்படும் என தெரிவித்தார்.

முன்னதாக குஜராத் துணை முதல்வர் நிதின் படேல், ஆமதாபாத் நகரம் கர்னாவதி என மாற்றப்படும் எனவும், உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத், பைசாபாத் நகரம் அயோத்யா என பெயர் மாற்றப்படும் எனவும் கூறி இருந்தனர் என்பத குறிப்பிடத்தக்கது.