பாஜக கூட்டணியில் மீண்டும் நிதிஷ்குமார்: தேர்தலில் பலன் தருமா? பீகார் கருத்துக்கணிப்பு சொல்வது என்ன?

பாஜக கூட்டணிக்கு மீண்டும் நிதிஷ்குமார் திரும்பியது எதிர்வரவுள்ள தேர்தல்களில் பலன் தருமா என்பது தொடர்பான கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன

Will Bihar cm nitish kumar reversal help NDA to win election here is what bihar survey says smp

பாஜகவுக்கு எதிராக ஓரணியில் திரண்டுள்ள இந்தியா கூட்டணியில் இருந்து, பீகார் முதல்வரும், ஐக்கிய ஜனதாதளம் கட்சியின் தலைவருமான நிதிஷ்குமார் விலகியுள்ளார். பீகார் முதல்வர் பதவியில் இருந்து ராஜினாமா செய்த நிதிஷ்குமார், பாஜக எம்எல்ஏக்களின் ஆதரவுடன் மீண்டும் முதல்வராகியுள்ளார். எதிர்க்கட்சிகளின் கூட்டணியான ‘இந்தியா’ கூட்டணியில் இருந்து வெளியேறுவதாகவும் அவர் அறிவித்துள்ளார். இந்தியா கூட்டணியுடனான சூழல் சரியில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்தியா கூட்டணி உருவாக முக்கிய காரணமாக இருந்த நிதிஷ்குமார் கூட்டணியில் இருந்து விலகியுள்ளது அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சந்தர்ப்பவாதி என அவர் மீது பலரும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். ஆனாலும், மக்களவைத் தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்பாக அரங்கேறியிருக்கும் இந்த சம்பவம் பாஜகவுக்கான வாய்ப்புகளை அதிகரித்துள்ளதாக என்டிடிவி பிரஷ்னம் கருத்துக் கணிப்பு கண்டறிந்துள்ளது.

பீகார் மாநில சட்டப்பேரவைக்கு அடுத்த 2025ஆம் ஆண்டு தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், சுமார் 4000 பேரிடம் நடத்தப்பட்ட இந்த கருத்துக்கணிப்பானது பீகாரில் அரங்கேறியுள்ள இந்த மாற்றமானது பொதுத் தேர்தலில் பாஜகவுக்கு சாதகமாக மாறும் என்று கூறுகிறது. இந்த கருத்துக்கணிப்பில் கலந்து கொண்ட 53 சதவீதம் பேர் எதிர்வரவுள்ள மக்களவைத் தேர்தலில் பாஜக-ஐக்கிய ஜனதாதள கூட்டணிக்கு வாக்களிப்போம் என தெரிவித்துள்ளனர். ஆர்ஜேடி-காங்கிரஸ் கூட்டணிக்கு ஆதரவளிப்பதாக 23 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர். மீதமுள்ள 24 சதவீதம் பேர் பிற கட்சிகளுக்கு வாக்களிப்பதாகவும், இன்னும் முடிவு செய்யவில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.

உலகின் ஊழல் நிறைந்த நாடுகளின் பட்டியல் வெளியீடு.. இந்தியா மற்றும் பாகிஸ்தான் எத்தனையாவது இடம் தெரியுமா?

ஐக்கிய ஜனதாதளம், ஆர்ஜேடி, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய மகாகத்பந்தன் கூட்டணி தொடர்ந்திருந்தால் வாக்களிக்கும் விருப்பம் என்னவாக இருக்கும் என்ற கேள்விக்கு, 35 சதவீதம் பேர் மகாகத்பந்தன் கூட்டணிக்கும், 35 சதவீதம் பேர் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கும் ஆதரவு தெரிவித்துள்ளனர். இதன் மூலம், நிதிஷ்குமார் மீண்டும் திரும்பியது தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு சாதகமாக மாறியுள்ளது என்பது தெரியவந்துள்ளது.

பீகாரில் நடந்துள்ள மாற்றத்துக்கு பிறகு, தேசிய ஜனநாயகக் கூட்டணி வாக்களர்கள் சுமார் 73 சதவீதம் பேர் பாஜக-ஐக்கிய ஜனதாதள கூட்டணியை ஆதரிப்பதாகக் கூறியுள்ளனர். இது, நிதிஷ்குமாரின் வருகையை பாஜக வாக்காளர்கள் பெருமளவில் ஏற்றுக்கொண்டதைக் குறிக்கிறது.

ஹேமந்த் சோரனின் 1300 கி.மீ கார் பயணம்: யார் கண்ணிலும் சிக்காமல் எப்படி ஜார்கண்ட் வந்தார்?

எதிரவரவுள்ள மக்களவை தேர்தல் மட்டுமல்லாமல், 2025ஆம் ஆண்டு பீகார் மாநில சட்டமன்றத் தேர்தலிலும் கூட பாஜகவுக்கு பலனளிக்கும் என கருத்துக்கணிப்பு கண்டறிந்துள்ளது. கருத்துக்கணிப்பில் கலந்து கொண்டவர்களில் 54 சதவீதம் பேர் அம்மாநில சட்டமன்றத் தேர்தலில் பாஜக-ஜேடியு கூட்டணிக்கு ஆதரவளிப்பதாகக் கூறியுள்ளனர். 27 சதவீதம் பேர் ஆர்ஜேடி-காங்கிரஸ் கூட்டணிக்கு ஆதரவளிப்பதாகக் கூறியுள்ளனர்

அதேபோல், ஐக்கிய ஜனதாதளம், ஆர்ஜேடி, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய மகாகத்பந்தன் கூட்டணி அப்படியே தொடர்ந்திருந்தால் 2025ஆம் ஆண்டு பீகார் சட்டமன்றத் தேர்தலில் அக்கூட்டணிக்கு வாக்களிப்போம் என 41 சதவீதம் பேர் கூறியுள்ளனர். 35 சதவீதம் பேர் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக் கூட்டணிக்கு வாக்களிப்போம் என தெரிவித்துள்ளனர்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios