ஹரியானா மாநிலத்தில் விவாகரத்துக்கு சம்மதிக்காத மனைவியை கணவனே தன் நண்பர்களை வைத்து பாலியல் பலாத்காரம் செய்ய வைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஹரியானா மாநிலம் சிர்ஷா பகுதியில், சாலையோராத்தில் ஒரு இளம்பெண் மயக்க நிலையில், நிர்வாணமாக கிடந்தார். இதை பார்த்த அப்பகுதி மக்கள், இளம்பெண்ணை மீட்டு, அங்குள்ள அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

டாக்டர்களின் மருத்துவ பரிசோதனையில், அந்த இளம்பெண் பாலியல் துன்புறுத்தல் அடைந்தது தெரியவந்தது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.

ஹரியானா மாநிலம் சிர்ஷா பகுதியை சேர்ந்த  அந்த இளம்பெண்ணுக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன் திருமணம் ஆனது. கணவன் மற்றும் அவரது குடும்பத்தினர், இளம்பெண்ணை சித்திரவதை செய்துள்ளனர். இதனால், அவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

இதையடுத்து இளம்பெண்ணை விவாகரத்து செய்யும்படி கணவரின் குடும்பத்தினர் வற்புறுத்தியுள்ளனர். அதற்கு அந்த பெண் மறுப்பு தெரிவித்து வந்துள்ளார்.

இந்நிலையில், அந்த பெண்ணின் கணவன், தனது நண்பர்கள் 3 பேருடன் சம்பவம் நடந்த அன்று வீட்டுக்கு சென்றுள்ளார். அங்கு தனது மனைவியை பாலியல் துன்புறுத்தல் செய்யும்படி நண்பர்களிடம் கூறியுள்ளார். இதனால், அதிர்ச்சியடைந்த இளம்பெண், அங்கிருந்து தப்பியோடினார்.

ஆனால், அவரை துப்பாக்கி முனையில் மடக்கிய அவர்கள், பாலியல் கொடுமை செய்துள்ளனர். பின்னர், அவரை காரில் ஏற்றி சென்ற அவர்கள், சாலையோராத்தில் வீசி விட்டு சென்றனர் என இளம்பெண் போலீசாரிடம் கூறினார்.

இதையடுத்து போலீசார், இள்ம்பெண்ணின் கணவன், மாமியார், மைத்துனி மற்றும் பாலியல் கொடுமை செய்த 3 நண்பர்கள் ஆகியோரை கைது செய்தனர். பின்னர், அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.