Asianet News TamilAsianet News Tamil

ஆர்.எஸ்.எஸ்., பாஜகவின் ஊதுகுழல் ஜெய்சங்கர்: ப.சிதம்பரம் சரமாரி கேள்வி!

கச்சத்தீவு விவகாரத்தில் வெளியுறவுத்துறை அமைச்சரும், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகமும் அந்தர் பல்டி அடிப்படி ஏன் என முன்னாள் அமைச்சர்  ப.சிதம்பரம் சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளார்

Why is the Foreign Minister jaishankar and his ministry doing a somersault now p chidambaram question smp
Author
First Published Apr 1, 2024, 3:47 PM IST

தமிழகத்தில் கச்சத்தீவு விவகாரம் பூதாகரமாகியுள்ளது. மக்களவைத் தேர்தலையொட்டி, இந்த பிரச்சினையை கையில் எடுத்துள்ள பாஜக, கடந்த இரண்டு நாட்களாக 1974 ஆம் ஆண்டில் நடந்த இந்த சம்பவம் தொடர்பாக திமுக, காங்கிரஸ் ஆகிய கட்சிகளை விமர்சித்து குற்றச்சாட்டுக்களை அடுக்கி வருகிறது.

அதன் ஒருபகுதியாக பாஜக மாநிலங்களவை எம்.பி.யும், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சருமான ஜெய்சங்கர் டெல்லியில் உள்ள அக்கட்சியின் தலைமையகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், காங்கிரஸ் மற்றும் திமுக ஆகிய இரு கட்சிகளும் தங்களுக்கு எந்தப் பொறுப்பும் இல்லை என்பது போல் இந்த விவகாரத்தை அணுகியுள்ளன என்றார். கட்சத்தீவு இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்டதற்கு இரண்டு கட்சிகளை அவர் சரமாரியாக குற்றாம் சாட்டினார்.

இந்த நிலையில், ஆர்.எஸ்.எஸ்., பாஜகவின் ஊதுகுழலாக வெளியுறவுத்துறை அமைச்சர் செயல்படுவதாக முன்னாள் நிதியமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில், “கடந்த 2015ஆம் ஆண்டு தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்ச்விக்கு கச்சத்தீவு இலங்கைக்கு சொந்தம் என வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியது. தற்போது அந்த விவகாரத்தில் வெளியுறவுத்துறை அமைச்சர் அந்தர் பல்டி அடிப்படி ஏன்.” என கேள்வி எழுப்பியுள்ளார்.

 

 

மேலும், வெளியுறவுச் சேவை அதிகாரியாக பணியாற்றி தற்போது வெளியுறவுத்துறை அமைச்சராக இருக்கும் ஜெய்சங்கர், பாஜக, ஆர்.எஸ்.எஸ்.இன் ஊதுகுழலாக மாறியுள்ளார். வரலாற்றில் ஜெய்சங்கரின் வாழ்க்கை பதிவு செய்யப்படும் எனவும் ப.சிதம்பரம் குற்றம் சாட்டியுள்ளார்.

திகார் சிறையில் அடைக்கப்படும் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்!

முன்னதாக, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை குடியரசுத் தலைவர் உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும் என காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை வலியுறுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us:
Download App:
  • android
  • ios