PFI ban: nia:pfi india: பிஎப்ஐ அமைப்பு, துணை அமைப்புகளுக்கு தடை ஏன்? மத்திய அரசின் 10 காரணங்கள்
பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பு மற்றும் அது சார்ந்த அமைப்புகள், துணை அமைப்புகள் ஆகியவற்றுக்கு 5 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டது ஏன் என்பது குறித்து மத்திய உள்துறைஅமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.
பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பு மற்றும் அது சார்ந்த அமைப்புகள், துணை அமைப்புகள் ஆகியவற்றுக்கு 5 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டது ஏன் என்பது குறித்து மத்திய உள்துறைஅமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.
தீவிரவாத செயல்களுக்கு துணை செய்தல், நிதி திரட்டுதல் ஆகியவற்றில் ஈடுபடுவதாக புகார் எழுந்ததையடுத்து, 11 மாநிலங்களில் என்ஐஏ அமைப்பினர் பிஎப்ஐ அமைப்பின் அலுவலகங்கள், நிர்வாகிகளின் வீடுகளில் கடந்த வாரம் சோதனை நடத்தினர்.
குறிப்பிட்ட தலைவர்களுக்கு குறி! இளைஞர்களை தீவிரவாத அமைப்பில் சேர்க்க பிஎப்ஐ முயற்சி: என்ஐஏ அறிக்கை
இந்த சோதனையில் ஏராளமான ஆவணங்கள், ஆதாரங்களை என்ஐஏ அமைப்பினர் கைப்பற்றினர். 11மாநிலங்களி்ல் இருந்து 106 பேர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் 2வது சுற்றாக நேற்று 8 மாநிலங்களில் தேசிய விசாரணை முகமை சோதனை நடத்தியது. இதில் 150க்கும் மேற்பட்ட பிஎப்ஐ அமைப்புடன் தொடர்பில் இருப்போர், பிஎப்ஐ அமைப்பினர் உள்ளிட்டோரை கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.
இந்நிலையில் பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா மற்றும் அதுசார்ந்த அமைப்புகள், துணை அமைப்புகளுக்கு 5 ஆண்டுகள் தடை விதித்து மத்திய உள்துறை அமைச்சகம் இன்று அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. அதன்படி, “ பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியாவின் துணை அணைப்புகளாக ரிஹாப் இந்தியா
பவுண்டேஷன்(ஆர்ஐஎப்)தேசிய மனித உரிமைகளுக்கான கூட்டமைப்பு(என்சிஹெச்ஆர்ஓ), தேசிய பெண்கள்முன்னணி, ஜூனியர் பிரண்ட், எம்பவர் இந்தியா பவுண்டேஷன், அனைத்து இந்திய இஸ்லாமிக் கவுன்சில்(ஏஐஐசி), கேம்பஸ் பிரண்ட் ஆப் இந்தியா(சிஎப்ஐ) ஆகிய அமைப்புகளுக்கும்” தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த அமைப்புகளுக்கு ஏன் தடை விதிக்கப்பட்டுள்ளது என்பது குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.
1. ரிஹாப் இந்தியா பவுண்டேஷன்(ஆர்ஐஎப்)தேசிய மனித உரிமைகளுக்கான கூட்டமைப்பு(என்சிஹெச்ஆர்ஓ), தேசிய பெண்கள்முன்னணி, ஜூனியர் பிரண்ட், எம்பவர் இந்தியா பவுண்டேஷன், அனைத்து இந்திய இஸ்லாமிக் கவுன்சில்(ஏஐஐசி), கேம்பஸ் பிரண்ட் ஆப் இந்தியா(சிஎப்ஐ) ஆகிய அமைப்புகள் பிஎப்ஐ அமைப்புடன் நெருங்கிய தொடரில் இருந்தது தெரியவந்துள்ளது.
2. ரிஹாப் இந்தியா பவுண்டேஷன் அமைப்பு பிஎப்ஐ உறுப்பினர் மூலம் நிதி திரட்டியது, பிஎப்ஐ உறுப்பினர்களில் ஏராளமானோர் கேம்பஸ் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பில் உள்ளனர்,எம்பவர் இந்தியா பவுண்டேஷன், ரிஹாப் பவுண்டேஷன், ஜூனியர் பிரண்ட், அனைத்து இந்திய இஸ்லாமிக் கவுன்சில், தேசிய மனித உரிமைகளுக்கான கூட்டமைப்பு, தேசிய மகளிர் முன்னணி ஆகியவை பிஎப்ஐ தலைவர்களால் கண்காணிக்கப்படுகிறது,வழிகாட்டுதலின் பெயரில் நடத்தப்படுகிறது.
3. பிஎப்ஐ அமைப்பு தனது துணை அமைப்புகள் மூலம் இளைஞர்கள், பெண்கள், மாணவர்கள், இமாம்கள், வழக்கறிஞர்கள், நலிவடைந்த மக்கள் ஆகியோரிடம் அமைப்பை விரிவடையச் செய்து, உறுப்பினராகச் சேர்த்து, நிதி திரட்டுவதுதான் நோக்கமாகும்.
பிரதமர் மோடி மீது தாக்குதல் நடத்த பிஎப்ஐ அமைப்பு சதித்திட்டம்: அம்பலப்படுத்திய அமலாக்கப் பிரிவு
4. பிஎப்ஐ அமைப்போடு அதன் துணை அமைப்புகள் தொடர்பில் இருந்து கொண்டு நிதி திரட்டி வழங்குவது, அந்த நிதியை சட்டவிரோத செயல்களுக்கு பயன்படுத்துவதற்கு உதவிசெய்து வந்தன. பிஎப்ஐ அமைப்பு வலுவாக மாறவும், பல்வேறு இடங்களில் காலூன்றவும் இந்த துணை அமைப்புகள் உதவி செய்தன.
5. பிஎப்ஐ அமைப்புகளும், அதன் துணை அமைப்புகளும் சமூக, பொருளாதார, கல்வி சார்ந்த பணிகள் செய்வதாக வெளியில் காட்டிக்கொண்டன. ஆனால், உண்மையில் குறிப்பிட்ட சமூகத்துக்காகப் பணியாற்றினர். அரசியலமைப்புச் சட்ட அமைப்புகளையும், அரசியலமைப்பையும் அவமரியாதை செய்தனர்.
6. பிஎப்ஐ அமைப்பும், அதன் துணை அமைப்புகளும் சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டன. நாட்டின் ஒற்றுமை, இறையாண்மை, பாதுகாப்பு, அமைதி, சமூக ஒற்றுமையைக் குலைக்கும் வகையில் செயல்பட்டனர். தீவிரவாதிகளுடன் தொடர்பில் இருந்து ஆதரித்துள்ளனர்.
7. பிஎப்ஐ அமைப்பை நிறுவியர்கள் பலரும் தடை செய்யப்பட்ட சிமி அமைப்பின் நிர்வாகிகள். ஜமாத் உல் முஜாகிதீன் பங்களாதேஷ் அமைப்புடன் பிஎப்ஐ அமைப்புக்கு தொடர்பு உள்ளது.
8. சர்வதேச அளவில் தடை செய்யப்பட்ட ஐஎஸ் தீவிரவாத அமைப்புடன் பிஎப்ஐ அமைப்பு தொடர்பு கொண்ட சம்பவங்கள் உள்ளன.
9. பிஎப்ஐ அமைப்பும், அதன் துணை அமைப்புகளும் குறிப்பிட்ட ஒரு சமூகத்துக்கு எதிராகவே செயல்பட்டனர், சமூகத்தில், நாட்டில் பதற்றமான சூழலை உருவாக்க முயன்றனர்.பிஎப்ஐ அமைப்பைச் சேர்ந்தவர்கள் பலரும் தீவிரவாத அமைப்பில் இணைந்துள்ளனர்.
10. மேலே குறிப்பிட்ட இந்த காரணங்களுக்காக மத்தியஅரசுடன் ஆலோசித்து, சட்டவிரோத செயல்கள் தடுப்புச் சட்டம்1967 பிரிவு-3 ஆகியவற்றின் அடிப்படையில் பிஎப்ஐ அமைப்பு மற்றும் அதன் துணை அமைப்புகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது