காங்கிரஸ் கட்சி தலைவராக யார் தேர்ந்தெடுக்கப்பட்டாலும், முடிவுகளை எடுப்பதற்கும், கட்சியை வழிநடத்துவதற்கு அவர்களுக்கு முழு சுதந்திரம் அளிக்கப்படும் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உறுதிபட தெரிவித்துள்ளார். 

காங்கிரஸ் கட்சி தலைவராக யார் தேர்ந்தெடுக்கப்பட்டாலும், முடிவுகளை எடுப்பதற்கும், கட்சியை வழிநடத்துவதற்கு அவர்களுக்கு முழு சுதந்திரம் அளிக்கப்படும் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உறுதிபட தெரிவித்துள்ளார். காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் இருவரும் சொந்த நிலைப்பாடு கொண்டவர்கள் என்றும், அவர்களுக்கு என்று தனி கண்ணோட்டம் உள்ளது என்றும் தெரிவித்த ராகும், யாரையும் ரிமோட் கண்ட்ரோல் என்று அழைப்பது தவறு அப்படி சொல்வது அவ் இருவரையும் அவமதிக்கும் செயல் என கூறியுள்ளார்.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி முன்னெடுத்து வரும் இந்தியா ஒற்றுமை பயணம் 33 ஆவது நாளை எட்டியுள்ளது. ராகுல் காந்தி தலைமையிலான இந்த யாத்திரை கர்நாடக மாநிலம் துமகுருவில் உள்ள மாயச்சந்திராவில் இன்று காலை தொடங்கியது. அப்போது ஏராளமான காங்கிரஸ் தொண்டர்கள் ராகுல்காந்திக்கு வரவேற்பு அளித்தனர். பின்னர் அவருடன் இணைந்து பாதை யாத்திரை மேற்கொண்டனர். இடையில் ராகுல் காந்தி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் பல்வேறு கேள்விகளை முன் வைக்கப்பட்டது. 

முன்னதாக காங்கிரஸ் கட்சி தலைவர் தேர்தல் தொடர்பாக கருத்துக் கூற விரும்பவில்லை என கூறினார். செய்தியாளர் சந்திப்பில் மேலும் அவர் பேசியதாவது:- சுதந்திர போராட்டத்தில் ஆர்எஸ்எஸ் எந்த இடத்திலும் பங்கேற்கவில்லை, ஆர்எஸ்எஸ் ஆங்கிலேயர்களுக்கு உதவியாகவே இருந்தது என நினைக்கிறேன், சாவர்க்கர் ஆங்கிலேயர்களிடமிருந்து சலுகை பெற்றார். எனவே இது போன்ற உண்மைகளை பாஜக ஒருபோதும் மறைக்க முடியாது. காங்கிரசும் அதன் தலைவர்களும் மட்டுமே நாட்டின் சுதந்திரத்திற்காக போராடினார்கள் என்பதுதான் வரலாறு.

இதையும் படியுங்கள்: pm modi: பிரதமர் மோடி நாளை முதல் 3 நாட்கள் குஜராத் பயணம்: நாட்டின் முதல் சோலார் கிராமத்தை அறிவிக்கிறார்

நாங்கள் பாசிசக் கட்சி அல்ல நாங்கள் எதையும் உரையாடலின் மூலம் தீர்க்க விரும்புகிறோம். உரையாடலில் நம்பிக்கை கொண்ட கட்சி காங்கிரஸ். மற்றும் வெவ்வேறு கண்ணோட்டங்களையும், கருத்துக்களை நாங்கள் வரவேற்கிறோம். தேர்தலில் வெற்றிபெற ஒரு அணியாக செயல்பட வேண்டும் என்பது எங்களுக்கு நன்கு தெரியும்.

நாட்டில் வன்முறையையும் வெறுப்பையும் பரப்புவது தேச விரோதச் செயல், அப்படிப்பட்ட வெறுப்பையும் வன்முறையையும் பரப்புவோர்களை எதிர்த்து நாங்கள் போராடுவோம். இந்தியா மாநிலங்களின் ஒன்றியம் என்று நமது அரசியலமைப்புச் சட்டம் தெளிவாக கூறுகிறது. அதாவது நமது மொழிகள், மாநிலங்கள் மற்றும் மரபுகள் அனைத்திற்கும் சமமான முக்கிய துவம் உண்டு. அதுதான் நம் நாட்டில் இயல்பும்கூட என்றார்.

இதையும் படியுங்கள்: சாதி, வர்ணம் கைவிடப்பட வேண்டும்.. முடிந்துபோன விஷயம் என கடந்து செல்ல வேண்டும்.. RSS தலைவர் மோகன் பகவத்.

அப்போது காங்கிரஸ் கட்சி தலைவர்கள் தேர்தல் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், இது குறித்து இப்போது நான் எதுவும் கூற விரும்பவில்லை, அதே நேரத்தில் ரிமோட் கண்ட்ரோல் தலைவர்கள் என பாஜகவினர் கூறுவது சரியல்ல, காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிடும் இரு வேட்பாளர்களும் தனித்தனி கண்ணோட்டம் கொண்டவர்கள், எதிலும் சொந்தமான சிந்திக்க கூடியவர்கள், இப்படிப்பட்ட நிலையில் யாரையும் ரிமோட் கண்ட்ரோல் என்று அழைப்பது தவறு, அது இருவரையும் அவமதிக்கும் செயல் என்றார்.

மேலும் கர்நாடக தேர்தல் குறித்து கருத்து தெரிவித்த ராகுல் காந்தி, வரும் தேர்தலில் காங்கிரஸ் மிகப்பெரிய அளவில் வெற்றி பெறும். இதை என் அனுபவத்தில் இருந்து கூறுகிறேன், ஊழல், பணவீக்கம், வேலையில்லாத் திண்டாட்டம் போன்றவற்றால் மக்கள் சோர்வடைந்துள்ளனர். எப்போதும் ஆர்எஸ்எஸின் எதிராகவே நான் இருக்கிறேன், இவ்வாறு அவர் கூறினார். 

குறிப்பு: 22 ஆண்டுகளுக்கு பிறகு காங்கிரஸ் தலைவர் பதவிக்கு அக்டோபர் 17ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. அதில் மூத்த தலைவர்கள் மல்லிகார்ஜுன கார்கே- சசிதரூர் வேட்பாளர்களாக களம் இறங்கியுள்ளனர். அக்டோபர் 19ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.