who shot dead Mahatma Gandhi in his office has created the All India Hindu Mahasaya dispute

மகாத்மா காந்தியை சுட்டுக் கொன்ற கோட்சேவின் சிலையை தனது அலுவலகத்தில் நிறுவி அகில இந்திய ஹிந்து மகாசபை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு காங்கிரஸ் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. 

குவாலியரில் உள்ள அகில இந்திய ஹிந்து மகா சபை அலுவலகத்தில் காந்தியை சுட்டு கொன்ற நாதுராம் கோட்சேவின் மார்பளவு சிலையை ஹிந்து மகா சபையின் தேசிய துணை தலைவர் ஜெய்வீர் பரத்வாஜ் திறந்து வைத்தார். 

சிலை திறப்பு அன்று கோட்சேயின் நினைவு தினத்தையும் ஹிந்து மகாசபையினர் அனுசரித்துள்ளனர். 

காந்தியை கொன்ற கோட்சேவிற்கு சிலை வைத்துள்ளதை கண்டித்து போபாலில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கோட்சேவுக்கு ஆலயம் கட்டுவதே இந்து மகா சபையின் நீண்ட நாள் நோக்கம். ஆனால் இதற்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி அளிக்காததால் இந்து மகா சபை அலுவலகத்தில் சிலை வைக்கப்பட்டுள்ளது. 

மேலும் விரைவில் கோட்சே கோயில் கட்டப்படும் என்றும் இந்து மகா சபையினர் தெரிவித்துள்ளனர். 

கோட்சேயின் சிலை திறக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்துள்ள காங்கிரஸ் இந்து மகா சபை மீது தேசத் துரோக வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.