வெளிநாட்டில் சட்ட விரோதமாக பணம் பதுக்கியுள்ளவர்களின் பணத்தை இஅந்திய அரசாங்கம் தலையிட்டு அதனை வசப்படுத்த கொரோனா வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

வளரும் நாடுகளில் இருந்து வெளிநாடுகளுக்கு சட்ட விரோதமாக கருப்பு பணம் பதுக்குவது ஆண்டுதோறும் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. குறிப்பாக, கடந்த 2002ம் ஆண்டு முதல் 2011ம் ஆண்டு வரை இந்தியாவில் இருந்து மட்டும் 343.04 பில்லியன் டாலர் மதிப்பிலான கருப்புப் பணம் அயல் நாடுகளில் பதுக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. 

இதன்மூலம் கருப்புப் பணம் பதுக்கலில் உலகளவில் இந்தியா 5ம் இடத்தில் உள்ளது. இந்தியாவில் உள்ள ஒவ்வொரு அரசியல் கட்சியினரும் இப்படி வெளிநாட்டில் பணத்தை பதுக்கி வைத்துள்ளனர். அந்த கருப்புப்பணத்தை மீட்டால், இங்குள்ள ஒவ்வொருவரின் கணக்கிலும் ரூ.15 லட்சம் லட்சம் ரூபாய்  அக்கவுண்டில் செலுத்தப்படும் அளவுக்கு வெளிநாட்டில் இந்தியர்களின் பணம் குவிந்து கிடக்கிறது.

 

இந்தப்பணத்தை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வந்தாலும் தற்போது கொரோனா அதனை எளிமையாக்கி இருக்கிறது. அதாவது இனி   நாட்டிற்குத் தெரியாமல் வெளிநாட்டில் வங்கிகளில் போட்டுள்ள பணமெல்லாம் இந்திய அரசாங்கம் வசம் வர இருக்கின்றன. பணம் போட்டு வைத்துள்ள அந்த நாட்டு அரசாங்கம் திவாலாவதைத் தடுக்க, அந்த வங்கிகளை அரசுடமையாக்கலாம். அந்த அரசாங்கம் அந்த வங்கியிலுள்ள தொகைகளை கடனாகப்பெற்று வளர்ச்சிக்காக முதலீடு செய்யலாம். அப்போது இவர்கள் போட்ட பணமெல்லாம் உடனே கிடைக்க வாய்ப்பிருக்காது. சில வருடங்கள் கழித்து கிடைக்கும்போது நமது அரசாங்கம் தலையிட்டு அதனை வசப்படுத்த வாய்ப்புகள் அதிகம் ஏற்பட்டுள்ளது.

 

ஆக மொத்தத்தில் அரசியல்வாதிகளும், பெரும் தொழில் அதிபர்களும் எப்படி சம்பாதித்தார்களோ அதைவிட சீக்கிரமாக காணாமல் போகும்.  நமக்கு என்ன மடியில் கனமில்லை அதனால் பயமில்லாமல் வாழ்க்கையை தொடரலாம். வெளிநாட்டு வங்கியில் பணம் போட்டவர்களுக்கு பட்டை நாமம் மட்டுமே மிஞ்சும்.

மொத்தத்தில் இந்த கொரோனா கைகளை மட்டும் கிருமி நாசினியால் சுத்தமாகாக்காமல் நாட்டையே சுத்தமாக்கி, மக்கள் மனதை சுத்தமாக்கி, அரசியலை சுத்தமாக்கிச்செல்ல இருக்கிறது.