கிரிக்கெட் வீரர் விராட் கோலி - நடிகை அனுஷ்கா சர்மா குறித்த கேள்வி ஒன்று பள்ளி வினாத்தாளில் அச்சிடப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலியும், பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவும் காதலித்து வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. விளம்பரம் ஒன்றில் இவர்கள் ஒன்றாக நடித்த பின்னரே காதலித்து வருவதாக கூறப்படுகிறது.

இந்தநிலையில், மகாராஷ்ட்ரா மாநிலம் தானே மாவட்டத்தில் பிவாண்டி நகரில் சாச்சா நேரு உயர்நிலைப் பள்ளி ஒன்று உள்ளது. இந்த பள்ளியில் தேர்வு நடைபெற்று வந்த நிலையில், விராட் கோலி - அனுஷ்கா குறித்து பள்ளி வினாத்ததாளில் கேட்கப்பட்டுள்ளது.

விராட் கோலியின் கேர்ள் பிரண்ட் யார்? என்று பள்ளி வினாத்தாளில் கேட்கப்பட்டுள்ளது. இந்த கேள்விக்கான விடைகள் கண்டறியும் பட்டியலில் அனுஷ்கா, பிரியங்கா, தீபிகா என மூன்று நடிகைகளின் பெயர்களும் அச்சிடப்பட்டுள்ளது.

அது மட்டுமல்லாமல், இது ஜோக்கிற்காக அல்ல என்றும் இதற்கு சரியான பதிலளிப்பவர்களுக்கு தகுந்த மதிப்பெண் வழங்கப்படும் என்றும் வினாத்தாளில் அச்சிடப்பட்டுள்ளது.

பள்ளி வினாத்தாள் ஒன்றில் விராட்கோலி - அனுஷ்கா சர்மா குறித்த கேள்வி இடம் பெற்றது பெரும் பரபரப்பை உருவாக்கி உள்ளது.