ரெயில் பயணத்தின் போது, பயணிகள் தங்களுக்கு விரும்பிய திரைப்படங்கள்,பாடல்கள், டி.வி நிகழ்ச்சிகளை ஸ்மார்ட்போன், லேப்டாப், ஐபாட்உள்ளிட்டவற்றில் பார்த்து மகிழும் வசதி விரைவில் நடைமுறைக்கு வர உள்ளது

மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்துப் பூர்வமாக பதில் அளித்து, மத்தியரெயில்வே துறை இணை அமைச்சர் ராஜென் கோகெயின் பேசியதாவது-

நாடுமுழுவதும் 1,300 ரெயில்களில் பயணிகள் தங்களின் பயணித்தின் போது, தங்களுக்கு விரும்பிய திரைப்படங்கள்,பாடல்கள், டி.வி நிகழ்ச்சிகளை செல்போன்,லேப்டாப் உள்ளிட்டவற்றில் பார்த்து மகிழும் வசதி விரைவில் நடைமுறைக்கு வர உள்ளது. இந்த ேசவையை வழங்க விருப்பமுள்ள நிறுவனங்களிடம் இருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

இதன்படி, பயணிகளின் தங்களின் விருப்பத்துக்கு ஏற்ப, ஏற்கனவே இருக்கும் பாடல், திரைப்படங்களை பார்த்து மகிழலாம். சதாப்தி, ராஜ்தானி உள்ளிட்ட 1,300ரெயில்களில் இந்த வசதி நடைமுறைக்கு வர உள்ளது.

இந்த திட்டம் நடைமுறைக்கு வந்தால், பயணிகள் தங்களுக்க விருப்பப்பட்ட, பிரபல திரைப்படங்கள், டி.வி நிகழ்ச்சிகள் ஆகியவற்றை தங்களின் லேப்டாப்,ஸ்மார்ட்போன்கள் உள்ளிட்ட மற்ற கருவிகளில் பார்த்து மகிழலாம். இதைப் பார்ப்பதற்கு பயணிகள் கட்டணம் செலுத்த வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.