ஜம்மு காஷ்மீருக்கு எப்போது மாநில அங்கீகாரம் கிடைக்கும், சட்டசபைத் தேர்தல் எப்போது நடக்கும் என்பது குறித்து மத்திய உள்துறைஅமைச்சர் அமித் ஷா விளக்கம் அளித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீருக்கு எப்போது மாநில அங்கீகாரம் கிடைக்கும், சட்டசபைத் தேர்தல் எப்போது நடக்கும் என்பது குறித்து மத்திய உள்துறைஅமைச்சர் அமித் ஷா விளக்கம் அளித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அதிகாரச் சட்டம் 370 பிரிவை மத்திய அரசு கடந்த 2019ம் ஆண்டு நீக்கியது. இதையடுத்து, ஜம்மு காஷ்மீருக்கு யூனியன் பிரதேச அந்தஸ்தை மத்திய அரசு வழங்கியது. இங்கு தேர்தல் நடத்த வேண்டும், மாநில அந்தஸ்தை மீண்டும் வழங்க வேண்டும் என்பது மக்களின் கோரிக்கையாக இருந்து வருகிறது.

இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு பிரத்யேகப் பேட்டியளித்தார். அப்போது அவரிடம் ஜம்முகாஷ்மீரில் எப்போது சட்டசபைத் தேர்தல் நடக்கும், மாநில அந்தஸ்து எப்போது கிடைக்கும் என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் பதில் அளித்ததாவது:
15 நாட்கள் பழங்குடியினர் திருவிழா! பிரதமர் மோடி வரும் 16ம் தேதி டெல்லியில் தொடங்கி வைக்கிறார்
ஜம்மு காஷ்மீரில் நிலைமை படிப்படியாக மேம்பட்டு வருகிறது, தீவிரவாதம் தொடர்பான சம்பவங்கள் மிகவும் குறைந்துவிட்டன. வளர்ச்சித் திட்டப் பணிகள் ஜம்மு காஷ்மீரில் செயல்படத் தொடங்கியபின், அங்கு தீவிரவாதச்செயல்கள் குறைந்து வருகின்றன. முன்பு இருந்ததை விட அங்கு நிலைமை மாறிவிட்டதை புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
இடதுசாரி தீவிரவாதம் மற்றும் காலிஸ்தான் அமைப்பினர் நடமாட்டத்தை அரசு தீவிரமாகக் கண்காணித்து வருகிறது. ஜம்மு காஷ்மீரில் எப்போது தேர்தல் நடக்கும் என்பதை நான் கூறய முடியாது. அதுதேர்தல் ஆணையத்திடம்தான் கேட்க வேம்டும்.
ஆனால், ஜம்மு காஷ்மீரில் சட்டசபைத் தேர்தல் முடிந்தபின்புதான் அங்கு மாநில அந்தஸ்து திரும்ப வழங்கப்படும். வாக்காளர்கள் கணக்கெடுக்கும்பணி நடந்து முடியும் தருவாயில் இருக்கிறது. இனிமேல் தேர்தல் குறித்து தேர்தல் ஆணையம்தான் முடிவு செய்யும் நான் எந்தக் கருத்தும் கூற முடியாது.
ஜம்மு காஷ்மீரில் புதிய தலைமை உருவாகும் என்று நான் முன்பு கூறியது என்பது, உள்ளாட்சித் தேர்தல் முடிந்தபின்வரும் எனத் தெரிவித்தேன்.

சபரிமலையில் விமானநிலையம் அமைவது எப்போது? நாடாளுமன்றத்தில் மத்திய அரசு பதில்
ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதம் குறைந்தவிட்டநிலையில் ஆண்டுதோறும் கோடிக்கணக்கான சுற்றுலாப் பயணிகள், யாத்ரீகர்கள் வருகிறார்கள், மாற்றம் பெரிய அளவில் நடந்துள்ளது.
ஜம்மு காஷ்மீருக்கு 370பிரிவை ரத்து செய்வதுஎன்பது பாஜக, ஜன சங்கத்தின் திட்டம். கடந்த 1950ம் ஆண்டிலிருந்தே எங்கள் நோக்கமாக இருந்து வருகிறது. நாட்டின் முதல் பிரதமர் நேருகூட, இதைப் பற்றி தெரிவித்துள்ளார்.
இப்போது ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதம் குறைந்து, படிப்படியாக வளர்ச்சி ஏற்படத் தொடங்கியுள்ளது. ஜம்மு காஷ்மீரில் மக்கள் கடந்த 70 ஆண்டுகளாக ஒரே குடும்பத்தின் ஆட்சியின் கீழ்இருந்ததால், அவர்களுக்கு உள்ளாட்சித் தேர்தல் நினைவில்லை. 3 குடும்பங்கள் ஜம்மு காஷ்மீரை ஆட்சி செய்து சத்தமிட்டன. பரூக் அப்துல்லா இங்கிலாந்து சென்றுவிட்டார், இவர் ஆட்சியில்தான் தீவிரவாதம் வளர்ந்தது, வளர அனுமதிக்கப்பட்டது. அவர்கள்தான் பதில் அளி்க்க கடமைப்பட்டவர்கள்.
இவ்வாறு அமித் ஷா தெரிவித்தார்
