Asianet News TamilAsianet News Tamil

இஸ்ரேலுக்கும்-இந்தியாவுக்கும் இப்படி ஒரு தொடர்பா? - அசத்திய பிரதமர் மோடி

What the history behind PM Modis gifts to Israel Benjamin Netanyahu
What's the history behind PM Modi's gifts to Israel's Benjamin Netanyahu
Author
First Published Jul 5, 2017, 3:56 PM IST


இஸ்ரேலுக்கு 3 நாட்கள் பயணமாகச் சென்றுள்ள பிரதமர் மோடி அந்த நாட்டு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹூவுக்கு கேரளாவில் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட பழங்கால இரு செப்புத் தகடுகளை பரிசாக அளித்தார்.

இந்த செப்புத் தகடி இந்தியாவுக்கும், யூதர்களுக்கும் இடையே நீண்டகாலமாக தொடர்பு இருப்பதை உணர்த்தும் விதமாக இந்த பரிசுகளை பிரதமர் மோடி வழங்கினார்.

இஸ்ரேல் நாட்டுக்கு வரலாற்று சிறப்புமிக்க பயணமாக பிரதமர் மோடி நேற்று முன் தினம் சென்றார். 3 நாட்கள் தங்கும் பிரதமர் மோடிக்கு, தெல் அவைவ் விமான நிலையத்தில் சிவப்பு கம்பள வரவேற்பும், ராணுவமரியாதையையும் அளிக்கப்பட்டது.

இந்நிலையில், இஸ்ரேல் பிரதமர் ெநதன்யாஹூவின்அதிகாரப்பூர்வ இல்லத்துக்கு பிரதமர் மோடி நேற்று சென்றார். அங்கு அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

பிரதமர் நெதன்யாஹூவுக்கு யூத மொழியில் எழுதப்பட்ட, இரு செப்புத் தகடுளை பிரதமர் மோடி பரிசாக வழங்கினார்.

What's the history behind PM Modi's gifts to Israel's Benjamin Netanyahuகேரளாவில் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட இந்த இரு செப்புத்தகடுகளும் கி.பி. 9 மற்றும் 10ம் நூற்றாண்டைச் சேர்ந்தவையாகும்.

இதில் முதல் செப்புத்தகடு கொச்சி நகரில் யூதர்கள் வாழ்ந்துள்ளனர் என்பதை உணர்த்துகிறது.

கேரளாவில் வாழ்ந்த இந்து அரசர் சேரமான் பெருமாள்(பாஸ்கர ரவி வர்மா) காலத்தில் யூதர்களுக்கு  அதிகமான முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளதை காட்டுகிறது.

இதன் காரணமாக சிங்கிலி என்ற பகுதிக்கு யூதரான ஜோசப் ரப்பானை அரசராகவும் நியமித்துள்ளனர்.

கொச்சின் மற்றும் மலபார் பகுதிக்கு யூதர்கள் இடம் பெயர்ந்து செல்லும் முன்பாக கேரளாவின் சிங்கிலி,கிரங்கணூர் பகுதியில் நூற்றுக்கணக்காண ஆண்டுகளாக தலை முறைகளாக வாழ்ந்துள்ளனர் என வரலாற்றின் மூலம் தெரிகிறது. இதனால், இன்றும் சிங்கிலி, கிரங்கனூர்பகுதி யூதர்களின் 2-வது ஜெருசேலமாக கருதப்படுகிறது.

கொச்சி மட்டன்சேரியில் உள்ள பரதேஷ் சைனாகோக் மூலம் இந்த முதல் செப்புத் தகடு செய்யப்பட்டுள்ளது.

2-வது செப்புத் தகடு என்பது, இந்தியர்களுடன், யூதர்கள் நீண்டகாலமாக வர்த்தகத் தொடர்பு வைத்துள்ளனர் என்பதை குறிக்கிறது. இந்த செப்புத்தகட்டில் இந்து மன்னர் ஒருவர்,

தேவாலயத்துக்கு இடத்தையும், வரிச்சலுகையும் அளித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், மேற்கு ஆசியாவில் உள்ள முஸ்லிம்கள், கிறிஸ்துவர்கள்,ஜூரோஸ்ட்ரியன்ஸ், யூதர்கல் ஆகியோருடன் வர்த்தக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதை இந்த செப்புத்தகடு குறிப்பிடுகிறது.

இந்த 2-வது செப்புத்தகடு கேரளாவில் உள்ள திருவல்லா நகரில் இருக்கும் மலங்கரா மார் தோமா சிரியன் தேவாலயத்தின் மூலம் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Follow Us:
Download App:
  • android
  • ios