What was the reason for refusing to appoint Joseph as a judge? - P.Chidambaram
உச்சநீதிமன்ற நீதிபதியாக கே.எம். ஜோசப்பை நியமிக்க உச்சநீதிமன்ற கொலீஜியம் பரிந்துரைத்தும் அதை மத்திய அரசு மறுத்தது ஏன்? ஜோசப்பின் மதமா? அல்லது மாநிலமா? என்று முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.
உச்சநீதிமன்றம் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான கொலிஜீயம் குழுவில் காலியாக உள்ள இரண்டு இடங்களை நிரப்புவதற்கு உத்தரகாண்ட் ஐகோர்ட் தலைமை நீதிபதி கே.எம்.ஜோசப் மற்றும் மூத்த பெண் வழக்கறிஞர் இந்து மல்ஹோத்ரா ஆகிய இருவரையும் உச்சநீதிமன்றம், மத்திய அரசுக்குப் பரிந்துரை செய்தது.
உச்சநீதிமன்றம் அனுப்பிய இரண்டு பெயர்களில் மூத்த பெண் வழக்கறிஞர் இந்து மல்ஹோத்ராவை மத்திய அரசு பரிந்துரை செய்தது. ஆனால், கே.எம்.ஜோசப்
நியமனத்துக்கு ஒப்புதல் அளிக்கவில்லை. மேலும், ஜோசப் தேர்வு குடிறத்து மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கூறி நியமன பரிந்துரையை மத்திய அரசு திருப்பி அனுப்பியது.
கே.எம்.ஜோசப் நியமன பரிந்துரையை மத்திய அரசு திருப்பி அனுப்பியதற்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இது குறித்து முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம், நாளை உச்சநீதிபதியாக இந்து மல்ஹோத்ரா பதவியேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். அதே நேரத்தில், நீதிபதி கே.எம்.ஜோசப் நியமனத்தை மத்திய அரசு நிறுத்தி வைத்திருப்பது ஏமாற்றம் அளிப்பதாக டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
கே.எம்.ஜோசப் நியமன பரிந்துரையை நிறுத்தி வைத்திருப்பதற்கு காரணம் என்ன? அவரது மாநிலமா? அல்லது அவரது மதமா? அல்லது உத்ரகண்ட் வழக்கில் அவரது தீர்ப்பு காரணமா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
உச்சநீதிமன்றம், நீதிபதிகள் நியமனத்தை இறுதி செய்து அனுப்பியுள்ளது. ஆனால் ஜோசப் நியமனத்தை நிறுத்தி வைத்துள்ளது. சட்டத்தைவிட மோடி அரசாங்கம் பெரியதா? என்று ப.சிதம்பரம் தனது டுவிட்டர் பக்கத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.
