Asianet News TamilAsianet News Tamil

சுதந்திர தினம், குடியரசு தினம் கொடியேற்றம்: இரண்டுக்கும் என்ன வித்தியாசம் தெரியுமா?

1947 ஆகஸ்ட் 15ம் தேதி நாடு சுதந்திரம் அடைந்ததிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 15 அன்று, நாம் சுதந்திர தினத்தை கொண்டாடுகிறோம். இந்நாள் பிரிட்டிஷ் காலனி ஆட்சியாளர்களிடமிருந்து இந்தியா சுதந்திரம் அடைந்ததைக் குறிக்கிறது.
 

what is the difference between Independence Day Vs Republic Day? dee
Author
First Published Aug 14, 2024, 3:14 PM IST | Last Updated Aug 14, 2024, 3:39 PM IST

ஆகஸ்ட் 15ம் தேதி (நாளை) நாட்டின் 78வது சுதந்திர தினம் விமர்சையாக கொண்டாடப்படுகிறது. இந்நாளில், நமது நாட்டின் சுதந்திரத்திற்காக போராடிய சுதந்திரப் போராட்ட வீரர்களை நினைவு கூர்வோம். இந்தியா முழுவதும் சுதந்திரத்திற்காக தங்கள் இன்னுயிரை தியாகம் செய்த சுதந்திர போராட்ட வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் மக்கள் கலாச்சார நிகழ்ச்சிகள் மற்றும் கருத்தரங்குகள் நாடு முழவதும் நடைபெறும்.

சுதந்திர தினத்தில் தேசியக் கொடி ஏற்றப்படுகிறது, பறக்கவிடப்படவில்லை என்பது உங்களுக்குத் தெரியுமா?

"கொடி ஏற்றுதல்" மற்றும் "கொடி பறக்கவிடுதல் என்ற சொற்கள் பொதுவாக ஒன்றுக்கொன்று மாற்றப்படுகின்றன, ஆனால் அவை தேசியக் கொடி குறித்த வெவ்வேறு நுட்பங்களைக் குறிக்கின்றன.

சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினத்தில் தேசியக் கொடி எவ்வாறு வழங்கப்படுகிறது என்பதில் உள்ள நுட்பமான மற்றும் குறிப்பிடத்தக்க வேறுபாட்டை இங்கே தெரிந்துகொள்ளலாம்.

சுதந்திர தினம்

சுதந்திரதினத்தன்று தேசியக்கொடியானது கம்பத்தின் கீழே கட்டப்பட்டிருக்கும். அதனை பிரதமர் கீழிருந்து மேலே ஏற்றுவார்.

சுதந்திர தினத்தில் கொடி ஏற்றுவது என்பது ஒருவித சடங்காக பின்பற்றப்படுகிறது. கொடி ஏற்றுதல் என்பது ஒரு புதிய தேசத்தின் எழுச்சி, தேசபக்தி மற்றும் காலனித்துவ ஆட்சியிலிருந்து விடுதலை ஆகியவற்றைக் குறிக்கிறது.

Independence Day | வீடுகளில் கொடி ஏற்றலாமா? கூடாதா? என்ன செய்ய வேண்டும்?

குடியரசு தினம்

குடியரசு தினத்தன்று, கொடியை மடித்து அல்லது சுருட்டி கம்பத்தின் உச்சியில் பொருத்துவார்கள். பின்னர் அது குடியரசுத் தலைவரால் அவிழ்க்கப்பட்டு பறக்கவிடுவார்.

குடியரசு தினம் 1950-ல் இந்திய அரசியலமைப்பை ஏற்றுக்கொண்டதைக் குறிக்கிறது. காலனித்துவ ஆட்சியிலிருந்து இறையாண்மையுள்ள, ஜனநாயகக் குடியரசாக மாறியதை எடுத்துக்காட்டும் வகையில், அரசியலமைப்பில் வகுக்கப்பட்ட கொள்கைகளுக்கான உறுதிப்பாட்டை புதுப்பிப்பதற்கான அடையாளச் சைகையாக கொடி பறக்கவிடப்படுகிறது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios