மகாராஷ்டிர எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் தொடர்பான வழக்கை வியாழக்கிழமை விசாரித்த உச்ச நீதிமன்றம் 2016ஆம் ஆண்டு நபம் ரெபியா வழக்கில் அளித்த தீர்ப்பைச் சுட்டிக்காட்டியது.
நபம் ரெபியா மற்றும் துணை சபாநாயகர் ஆகியோருக்கு எதிரான உச்ச நீதிமன்ற அரசியலமைப்பு பெஞ்ச் வழக்கில், ஜூலை 13, 2016 அன்று, அமைச்சரவையின் பரிந்துரையின் பேரிலேயே ஆளுநர் சட்டசபை கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று தீர்ப்பு வழங்கப்பட்டு இருந்தது.
தீர்ப்பின் முக்கிய அம்சங்கள்:
1. ஆளுநர் தனது அதிகாரத்தை அல்லது விவேகத்தை பயன்படுத்த முடியாது. அவர் அமைச்சரவையின் உதவி மற்றும் ஆலோசனைகளுக்கு, முடிவுகளுக்கு கட்டுப்பட்டவர்.
2. முதலமைச்சரைத் தலைவராகக் கொண்ட அமைச்சர்கள் குழுவின் உதவி மற்றும் ஆலோசனையின் பேரில் மட்டுமே ஆளுநர் சபையை கூட்டவும், ஒத்திவைக்கவும் மற்றும் கலைக்கவும் முடியும். அவர் விருப்பம் போல் செயல்பட முடியாது.

3. அரசியலமைப்பின் 163வது பிரிவு ஆளுநருக்கு "அவரது அமைச்சர்கள் குழுவின் ஆலோசனைக்கு எதிராகவோ அல்லது இல்லாமலோ செயல்படுவதற்கான பொது விருப்ப அதிகாரத்தை" வழங்கவில்லை.
4. ஆளுநரின் விருப்புரிமை அதிகாரங்கள், குடியரசுத் தலைவருக்கு ஒரு மசோதாவை ஒப்புதல் அளிப்பது அல்லது நிறுத்தி வைப்பது/பரிந்துரைப்பது அல்லது முதலமைச்சரை நியமிப்பது அல்லது நம்பிக்கை இழந்து வெளியேற மறுக்கும் அரசாங்கத்தை பதவி நீக்கம் செய்வது போன்ற குறிப்பிட்ட பகுதிகளுக்கு மட்டுமே வரையறுக்கப்பட்டுள்ளது.
5. சபாநாயகரை நீக்குவதற்கான சட்டப்பிரிவு 179(சி)ன் கீழ் நோட்டீஸ் நிலுவையில் உள்ள நிலையில், கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட தகுதி நீக்க மனுவை ஒரு அவையின் சபாநாயகர் முடிவு செய்ய முடியாது என்று கூறப்பட்டு இருந்தது. நபம் ரெபியாவின் இந்த வழக்கின் தீர்ப்பின்படி மகாராஷ்டிரா வழக்கும் பெரிய அமர்வுக்கு மாற்றப்பட்டுள்ளது.
மாநிலங்களுக்கே அதிகாரம் உண்டு: டெல்லி அரசு தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு
