பிரதமர் மோடி தலைமையில் இன்று CCPA கூட்டம் நடைபெறுகிறது. புல்வாமா தாக்குதலுக்குப் பிறகு பாதுகாப்பு நிலைமை மதிப்பாய்வு செய்யப்பட்டு, பயங்கரவாதத்தை எதிர்ப்பதற்கான ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தானுக்கு எதிராக பல அதிரடி முடிவுகள் எடுக்கப்பட்டன.

CCPA meet PM Modi in Delhi: பிரதமர் நரேந்திர மோடி இன்று அரசியல் விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழுவின் (CCPA) கூட்டத்திற்கு தலைமை தாங்குகிறார். அமைச்சரவைக் குழுக்களில் மிகவும் சக்திவாய்ந்ததாக இந்த CCPA கருதப்படுகிறது. பெரும்பாலும் "சூப்பர் கேபினட்" என்று CCPA அழைக்கப்படுகிறது. 

அரசியல் விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு (CCPA) கூட்டம் 
ஜம்மு காஷ்மீரின் புல்வாமாவில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். பெரும்பாலும் சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டது உலக அளவில் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. அந்த சமயத்தில் சவுதி அரேபியா சென்று இருந்த பிரதமர் மோடி தனது பயணத்தை ரத்து செய்துவிட்டு இந்தியா திரும்பினார். உடனடியாக, உயர்மட்ட அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த நிலையில் செவ்வாயன்று புதுடெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் பிரதமரால் ஒரு உயர்மட்டக் கூட்டம் கூட்டப்பட்டது. இதைத் தொடர்ந்து இன்று அரசியல் விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழுவின் (CCPA) கூட்டம் நடக்கவிருக்கிறது.

புல்வாமா பயங்கரவாத தாக்குதலும் CCPA கூட்டமும் 
தேசியளவில் முக்கியத்துவம் வாய்ந்த அரசியல் மற்றும் பொருளாதார பிரச்சினைகளை மதிப்பாய்வு செய்வதிலும் முடிவெடுப்பதிலும் CCPA முக்கிய பங்கு வகிக்கிறது. கடந்த காலங்களில், CCPA முக்கியமான தருணங்களில் கூடி முடிவெடுத்துள்ளது. புல்வாமா பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு பிப்ரவரி 2019 இல் இதுபோன்ற ஒரு கூட்டம் நடைபெற்றது. அங்கு பாதுகாப்பு நிலைமை மதிப்பாய்வு செய்யப்பட்டு பயங்கரவாதத்தை எதிர்ப்பதற்கான ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. சில நாட்களுக்குப் பிறகு, பிப்ரவரி 26, 2019 அன்று, இந்திய விமானப்படை பாகிஸ்தானின் பாலகோட்டில் வான்வழித் தாக்குதல்களை நடத்தியது.

CCPA தலைவர் யார்?
அரசியல் விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழுவின் (CCPA) தலைவராக பிரதமர் நரேந்திர மோடி இருக்கிறார். இந்தக் குழுவில் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், உள்துறை அமைச்சர் அமித் ஷா, சாலைப் போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் ஆகியோர் உள்ளனர். பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழு கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் இன்று காலை 11 மணிக்கு நடக்கிறது. புல்வாமா சம்பவத்திற்குப் பின்னர் இது இரண்டாவது CCS கூட்டமாகும்.

பஹல்காம் தாக்குதலும் அதிரடி முடிவுகளும் 
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு மறுநாள் நடைபெற்ற முதல் CCS கூட்டத்தில், பாகிஸ்தானுடனான ராஜதந்திர உறவுகளை குறைத்தல், முக்கிய எல்லைப் பாதைகளை மூடுதல், சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இடைநிறுத்தம் செய்தல், புதுடெல்லியில் உள்ள பாகிஸ்தான் உயர் அலுவலகத்தில் இருந்து ராணுவ அதிகாரிகளை வெளியேற்றுதல் உள்ளிட்ட பாகிஸ்தானுக்கு எதிராக தொடர்ச்சியான முடிவுகள் இந்தக் கூட்டத்தில் தான் எடுக்கப்பட்டன. 

இந்திய ஆயுதப்படைக்கு முழு அதிகாரம் 
ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் சமீபத்தில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலளிக்க இந்திய ஆயுதப்படைகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை "முழுமையான சுதந்திர செயல் அதிகாரத்தை" வழங்கியதாக அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்தன.