What a special feature on the Gsat-19 satellite
இந்திய விண்வெளி ஆய்வு மையம் எனப்படும் இஸ்ரோ தயாரித்துள்ள ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 என்ற ராக்கெட் மூலம் ஜிசாட்-19 செயற்கைக்கோள் இன்று விண்ணில் ஏவப்படுகிறது. இஸ்ரோ தயாரித்த ராக்கெட்டுகளிலேயே அதிக எடை கொண்டது, ஜி.எஸ்.எல்.வி. அதாவது 640 டன் எடையுள்ளது. ஏற்கனவே இந்த ராக்கெட் 6 முறை விண்ணில் ஏவப்பட்டு சோதனை செய்யப்பட்டது. முதன்முதலாக செயற்கைக்கோளை சுமந்து செல்கிறது.
இந்த நிலையில் இன்று மாலை 5.28 மணிக்கு 7-வது முறையாக ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து விண்ணில் செலுத்தப்படுகிறது. அதற்கான 25 மணி நேர கவுண்ட்டவுன் நேற்று மாலை 3.58 மணிக்கு தொடங்கியது.

இது குறித்து அகமதாபாத்தில் உள்ள ஸ்பேஸ் அப்ளிகேஷன் மையத்தின் இயக்குநர் தபன் மிஸ்ரா கூறுகையில், “ இந்தியாவின் தகவல் தொடர்பு செயற்கைக்கோள்களில் மிகப்பெரிய திருப்பு முனையாக ஜிசாட்-19 செயற்கைக்கோள் அமையும். அதாவது இதற்கு முன் அனுப்பட்ட பழைய தொழில்நுட்பங்களைக் கொண்ட 6 முதல் 7 செயற்கைக்கோல் பணிகளை இந்த ஒரு செயற்ைகக்கோள் செய்யும்.
இந்த ஜிசாட்-19 தகவல் தொடர்பு செயற்கைக்கோளின் எடை 3,136 கிலை ஆகும். அதாவது ஒரு யானையை ராக்கெட்டில் ஏற்றிச்சென்றதுக்கு சமானமாகும். இதை விண்வௌியின் ‘வெள்ளை யானை’ என்று வர்ணிக்கலாம்.
இப்போது வான்வௌி நீள்வட்டபாதையில் 41 இந்தியச் செயற்கை கோள்கள் சுற்றி வருகின்றன. இதில் 13 தகவல் தொடர்பு செயற்கைக்கோள்களாகும். இந்தியாவிலேயே உருவாக்கப்பட்ட மிப்பெரிய செயற்கைக்கோள் டிஜிட்டல் இந்தியா திட்டத்தை நனவாக்கும்.
இதுநாள் வரை இந்தியா தயாரித்த செயற்கைக்கோள்களிலேயே மிகவும் எடை அதிகமானது ஜிசாட்-19 செயற்கைக்கோளாகும். பலபுதிய தொழில்நுட்பங்களுக்கு இந்த செயற்கைக்கோள் ஒரு சோதனைக்களமாகும்.

இந்த செயற்கைக்கோளில் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட லித்தியம் அயர்ன் பேட்டரிகள் பொருத்தப்பட்டுள்ளன. கார், பஸ்களில் பயன்படுத்தப்படும் லித்தியம் பேட்டரிகள் செயற்கைக்கோளிலும் பயன்படுத்தப்பட்டுள்ளன. இவை அனைத்தும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்த செயற்கைக்கோள் ஜியோஸ்டேசனரி ரேடியேசன் ஸ்பெக்ட்ரோமீட்டரை சுமந்து செல்கிறது. விண்வௌியில் செயற்கைக்கோள்கள், மின்னணு கருவிகள் எப்படி செயல்படுகின்றன, தங்களை எப்படி சார்ஜ் செய்து கொள்கின்றன என்பதை பற்றி ஆய்வு செய்யும். மேலும், இந்த செயற்கைக்கோளில் பொருத்தப்பட்டுள்ள அதிநவீன, அதிக வெப்பம் தாங்கும பைப், பைபர் ஆப்டிக் கைரோ, மைக்ரோ எலெக்ட்ரோ மெக்கானிக்கல் சிஸ்டம்ஸ் கருவிகள் எதிர்கால ஆய்வுக்கு வழிகாட்டியாக அமையும்.
முதல்முறையாக ஜிசாட்-19 செயற்கைக்கோளில் டிரான்ஸ்பாண்டர்கள் இல்லாமல் செல்கிறது. புதிய வழியில் பன்முக பன்பலை மூலம் டேட்டாக்களை விரைவாக பூமிக்கு அனுப்பும்’’ என்றார்.
ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 ராக்கெட் எடை தெரியுமா?
ஜி.எஸ்.எல்.வி மார்க்-3 ராக்கெடின் எடை என்து 5 போயிங் ஜம்போவிமானத்தில் சரக்கு ஏற்பட்டதற்கு சமம் அல்லது 200 வளர்ந்த யானைகளின் எடைக்கு சமம். இந்த ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 ராக்கெட் மூலம் இஸ்ரோவும் மனிதர்களை விண்வௌிக்கு அனுப்பமுடியும் என்பதை நிரூபிக்கிறது.
