Asianet News TamilAsianet News Tamil

மேற்கு வங்க பஞ்சாயத்துத் தேர்தல்: பலத்த பாதுகாப்புடன் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது

மேற்கு வங்க மாநிலத்தில் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் பஞ்சாயத்து தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெறுகிறது.

West Bengal Panchayat Election Result 2023: Counting of votes under way
Author
First Published Jul 11, 2023, 8:47 AM IST

மேற்கு வங்க மாநில பஞ்சாயத்துத் தேர்தல் பெரும் வன்முறை சம்பவங்களுக்கு மத்தியில் நடந்து முடிந்ததை அடுத்த, இன்று பலத்த பாதுகாப்புடன் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. சனிக்கிழமை மொத்தம் 61,636 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடந்த நிலையில், கள்ள ஓட்டு மற்றும் வன்முறை காரணமாக திங்கட்கிழமை 697 வாக்குச்சாவடிகளில் மறு வாக்குப்பதிவு நடந்தது.

மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சியான பாஜகவுக்கு இடையேயான கடும் போட்டி நிலவும் சூழலில் 2024 மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக நடைபெறும் பஞ்சாயத்து தேர்தல் முடிவுகள் கவனம் பெற்றுள்ளன. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது முதல் மாநிலம் முழுவதும் நடந்துவரும் வன்முறைச் சம்பவங்கள் அரங்கேறின.

2075ஆம் ஆண்டுக்குள் பொருளாதார வளர்ச்சியில் இந்தியா அமெரிக்காவை முந்தும்: கோல்டுமேன் சாக்ஸ் கணிப்பு

இதனால், இன்று நடைபெறும் வாக்கு எண்ணிக்கை பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நடைபெறுகிறது. மத்திய படைகள் மற்றும் மாநில காவல்துறை தீவிர பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளன. காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வருகிறது. அனைத்து வாக்கு எண்ணும் மையங்களிலும் மத்திய படைகள் குவிக்கப்பட்டு, சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

West Bengal Panchayat Election Result 2023: Counting of votes under way

வாக்குச்சாவடியைக் கைப்பற்றுதல், மோசடி செய்தல், வாக்குப்பெட்டிகளை சூறையாடுதல், வாக்குச்சாவடி அதிகாரிகளை தாக்குதல், துப்பாக்கிச் சூடு மற்றும் வெடிகுண்டு தாக்குதல்கள் போன்ற வன்முறைச் செயல்களால் ஜூலை 8ஆம் தேதி வாக்குப்பதிவு நாளில் குறைந்தது 18 பேர் பலியானார்கள். பலர் கணக்கானவர்கள் காயமடைந்தனர். 2018ஆம் ஆண்டு தேர்தலின்போது நடைபெற்ற வன்முறையில் 12 பேர் கொல்லப்பட்டதும் நினைவூட்டத்தக்கது.

முர்ஷிதாபாத்தில் அதிக பலி எண்ணிக்கை பதிவாகியுள்ளது. கள்ள ஓட்டு பதிவு, வன்முறை காரணமாக மறுவாக்குப்பதிவு நடத்தக் கோரி பாஜக, காங்கிரஸ், ஐஎஸ்எஃப் கட்சிகள் சார்பிலும் சுயேட்சை வேட்பாளர்கள் மற்றும் பொதுமக்கள் சார்பிலும் போராட்டங்கள் நடத்தப்பட்டன.

வேதாந்தாவை கைவிட்ட பாக்ஸ்கான்! திடீரென செமி கண்டக்டர் உற்பத்தி ஒப்பந்தம் முறிந்து ஏன்?

Follow Us:
Download App:
  • android
  • ios