மாதம்தோறும் ரூ.1,800 கோடி வருவாய்; மதுபானக் கடைகளை அதிகரிக்க அரசு முடிவு!

மதுபான விற்பனை மூலம் ஒவ்வொரு மாதமும் ரூ.1,800 கோடி வருவாய் வருகிறது. இதனால் மாநிலம் முழுவதும் மதுபானக் கடைகளை அதிகரிக்க மாநில அரசு முடிவு செய்துள்ளது

West Bengal government decided  increase the  liquor shops ray

மாதந்தோறும் ரூ.1,800 கோடி வருவாய்

இந்தியாவில் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, ஆந்திரா என தென் மாநிலங்களிலும் ஒரு சில வடமாநிலங்களிலும் மது விற்பனை அதிகமாக உள்ளது. அதுவும் தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை காலங்களில் மது விற்பனை சக்கைபோடு போடுகிறது. அந்த வகையில் மம்தா பானர்ஜி ஆட்சி செய்யும் மேற்கு வங்க மாநிலமும் மது விற்பனையில் சாதனை படைத்து வருகிறது. 

மேற்கு வங்க அரசு கடந்த ஆண்டு மது விற்பனை மூலம் மாதந்தோறும் ரூ.1,800 கோடி வருவாய் ஈட்டியதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இதனால் மாநில முழுவதும் மதுக்கடைகளை அதிகரிக்க மம்தா பானர்ஜி அரசு முடிவு செய்துள்ளது. மேற்கு வங்கத்தில் பஞ்சாயத்து பகுதிகளில் 3,339 கடைகள் உள்பட மாநிலம் முழுவதும் 7,746 அரசு அங்கீகாரம் பெற்ற மதுபானக் கடைகள் உள்ளன.

மதுபானக் கடைகளை அதிகரிக்க முடிவு 

அங்கு அனைத்து  பஞ்சாயத்து பகுதிகளிலும் மதுபானக் கடைகளை திறக்க அரசு முடிவு செய்திருக்கிறது. கடந்த 2024ம் ஆண்டு மட்டும் மேற்கு வங்க அரசு மது விற்பனை மூலம் ரூ.21,000 கோடி வருவாய் ஈட்டியுள்ளது. டிசம்பர் 24 முதல் 31ம் தேதி வரை மட்டும்  ரூ.654 கோடி மதுபான விற்பனை நடந்துள்ளதாக 
மேற்கு வங்கத்தின் கலால் துறை தெரிவித்துள்ளது.

2024ம் ஆண்டில் கொல்கத்தாவில் மட்டும் மதுபான விற்பனை மூலம் ரூ.3,618 கோடி வருவாய் மாநகராட்சிக்கு கிடைத்துள்ளது. இது 2023ம் ஆண்டில் ரூ.2,350 கோடியாக இருந்த நிலையில், கடந்த ஆண்டு பன்மடங்கு அதிகரித்துள்ளது. மாநிலத்தில் தெற்கு கொல்கத்தாவில் 405 மதுபானக் கடைகள் உள்ளன. புர்பா பர்தாமன் மாவட்டத்தில் அதிகப்ப‌ட்சமாக 439 கடைகள் உள்ளன. பஸ்சிம் பர்தாமன் மாவட்டத்டில் 418 மதுபானக் கடைகள் அமைந்துள்ளன.

வலுக்கும் எதிர்ப்பு 

கடந்த ஆண்டில் மேற்கு வங்க அரசின் மது விற்பனை இலக்கு  ரூ.21,846 கோடியாக இருந்த நிலையில், அதைவிட சற்று  (ரூ.21,000 கோடி வருவாய்) குறைந்துள்ளது. 2025ம் ஆண்டில் அதிக கடைகளை திறப்பதன் மூலம் இந்த இலக்கை முறியடிக்க அரசு திட்டமிட்டுள்ளது. மேற்கு வங்கத்தில் மற்ற துறைகளின் செலவுகளை ஈடுகட்டவும், மக்களுக்கான திட்டங்களை மேற்கொள்ளவும் மாநில அரசு மது வருவாயை அதிகம் சார்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மதுக்கடைகளை அதிகரிக்கும் மேற்கு வங்க அரசின் முடிவுக்கு எதிர்க்கட்சிகளும், சமூக ஆர்வலர்களும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். மாநிலத்தின் நிதி ஆதாரங்களை பெருக்க எத்தனையோ வழிகள் உள்ளன. மதுபானக் கடைகளை அதிகரித்து ஏழை, எளிய மக்களை குடிக்க வைத்து அவர்களின் குடும்பத்தை மம்தா பானர்ஜி அழித்துக் கொண்டிருக்கிறார் என அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios