உலகம் முழுவதுமே பல்வேறு நாடுகளில்  ஆபாச  தளங்கள் செயல்பட்டு  வருகிறது. இதனால்  சிறு வயதிலேயே  இளம் தலைமுறையினர்  பெரிதளவில் வழி தவறி  செல்வதற்கு வாய்ப்புகள் அதிகமாக உண்டு.

பொதுவாகவே முன்பெல்லாம் ஒரு காலத்தில், ஒரு ஆபாச படம் பார்ப்பது என்பதோ அல்லது ஆபாச கதைகள் என்பதோ யாருக்கும் தெரியாமல் மிகவும் ரகசியமாக பார்க்கக்கூடிய ஒரு விஷயமாக இருந்தது. அதனை கூட எல்லோராலும் பார்த்து விட முடியாது. மேலும் ஆபாச படம் பார்ப்பவர்கள் என தெரிந்தாலே அவர்கள் மீது ஏதோ ஒரு விதமான மரியாதை குறையும் போன்று எண்ணம் வரும்..

ஆனால் இப்போதோ இந்த உலகமே நம் கையில் அடங்கி உள்ளது என்பதற்கு ஆதாரமாக வளர்ந்து வரும் தொல்நுட்ப வளர்ச்சி விஞ்ஞான அறிவியல் மூலம் எத்தனையோ சலுகைகளுடன் ஒரு நொடியில் அத்தனையும் நாம் பார்த்து விடலாம்.

அதாவது ஒரு போன் இருந்தாலே போதும்... இதற்கிடையில் ஆபாசத்திற்காக எத்தனையோ இணையதளம்  உள்ளது. அதனை எல்லாம் கண்காணித்து, இது போன்ற இணையதளத்தை முடக்க வேண்டும் என கோரிக்கை வலுத்தது.

இந்நிலையில், ஆபாச தளங்களை முடக்கும்படி உத்தரகாண்ட் ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்ததை அடுத்து 827 ஆபாச இணைய தளங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.