வெறும் பப்ளிசிட்டியை மட்டுமே நோக்கமாகக் கொண்டு சபரிமலைக்குள் நுழைய முயன்ற பெண் பத்திரிகையாளர்கள் இருவரும் கோயிலுக்குள் நுழையவிடாமல் திருப்பி அனுப்பப்பட்டனர். அதே சமயம் வேறு சில பெண் பக்தர்கள் எவ்வித பிரச்சினையுமின்றி சன்னிதானத்துக்கு சென்றிருக்கின்றனர் என்று கேரள சுற்றுலாத்துறை அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் தெரிவித்திருக்கிறார். 

ஆந்திராவைச் சேர்ந்த கவிதா என்ற பெண் பத்திரிகையாளரும், எர்ணாகுளத்தைச் சேர்ந்த ரெஹனா பாத்திமா என்ற பெண் செயல்பாட்டாளரும் சபரிமலைக்கு வந்துள்ளனர். இருவரும் ஹெல்மட் அணிந்துள்ளனர். கவிதா போலீஸ் சீருடை போன்ற உடையில் வந்துள்ளார். இவர்கள் இருவராலும் சபரிமலை வட்டாரமே அல்லோலகல்லோலப்பட்டுக்கொண்டிருக்கிறது. 

அவர்கள் இருவரும் பக்தர்களே  அல்ல. பிரச்சினையைத் தூண்டுவதற்காகவே சன்னிதானத்துக்கு வந்திருக்கிறார்கள்’’ என்று பக்தர்களிடையே பெரும் எதிர்ப்பு கிளம்பியது. இந்நிலையில் அவர்கள் இருவரையும் அங்கிருந்து சமாதானப்பேசி அழைத்துச் சென்ற போலிஸ் அதிகாரிகள், சூழலின் ஆபத்தை எடுத்துச்சொல்லி அவர்கள் இருவரையும் திருப்பி அனுப்பிவைத்தனர்.