சர்ச்சைக்குரிய வகையில் பேசிய பாஜக முன்னாள் எம்.எல்.ஏ கியான் தேவ் அகுஜா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 

ராஜஸ்தான் பாஜக முன்னாள் எம்.எல்.ஏ கியான் தேவ் சர்ச்சைகுரிய வகையில் பேசிய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. அதில் அவர் பசுவதையில் ஈடுபடும் நபர்கள் யாராக இருந்தாலும் அவர்களை கொலை செய்யுங்கள் என்று பேசியுள்ளார். மேலும் நான் ஜாமீன் எடுத்து தருகிறேன் என்று அவர் பேசியுள்ளது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

மேலும் படிக்க:துணை வேந்தர் மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்த கையோடு டெல்லிக்கு பறந்த ஆளுநர் ரவி ..

அதுமட்டுமின்றி இதுவரை 5 பேரை கொன்றுள்ளதாகவும் சுதந்திரமாக கொலை செய்ய அனுமதி அளித்துள்ளதாகவும் அவர் அதிர்ச்சி தரும் தகவலை தெரிவித்துள்ளார். கொலை செய்பவர்களுக்கு ஜாமீனும், விடுதலையும் நாங்கள் பெற்று தருகிறோம் என்று அதில் பேசியுள்ளார். இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வன்முறையை தூண்டும் வகையில் அவர் பேசியுள்ள வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதையடுத்து, அவர் மீது ராஜஸ்தான் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். பாஜக முன்னாள் எம்.எல்.ஏவின் பேச்சு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது. 

மேலும் படிக்க:முதலைக் கண்ணீர் வடிக்கும் தமிழக ஆளுநர்..! அடம் பிடித்து நாடகம் ஆடுகிறார்.. சிபிஎம் பாலகிருஷ்ணன் ஆவேசம்

பாஜக மத ரீதியிலான பயங்கரவாதத்தை பரப்புகிறது என்பதை நிரூப்பிக்க இதை விட என்ன ஆதாரம் வேண்டியுள்ளது என்று தெரிவித்துள்ளது. இந்நிலையில் கியான் தேவ் கருத்து நாடு முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதற்கும் பாஜகவுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று விளக்கமளிக்கப்பட்டுள்ளது