we found diamond mount in andhra
ஆந்திராவில் வைர மலை..! இன்ப அதிர்ச்சியில் உறைந்த அரசு..!
ஆந்திராவில் வைரமலை கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதால், அரசு இன்ப அதிர்ச்சியில் மூழ்கி உள்ளது.
ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தில் 100 ஏக்கர் பரப்பளவில் பழமை வாய்ந்த கோட்டை இருந்துள்ளது.இந்த கோட்டையை அரவீடு திம்மராஜா என்பவா், 16ம் நூற்றாண்டில் மலையை குடைந்து கட்டி உள்ளதாக கூறப்படுகிறது.

இவருக்கு அடுத்தபடியாக குத்திராஜா,விஜயநகர அரசர்கள் ஆட்சியின் கீழ் இந்த கோட்டை இருந்துள்ளது.பின்னர் இந்த கோட்டையை நோக்கி போர்ச்சுகீசியர்கள் போர் தொடுத்து வந்தபோது,மன்னர்கள் இந்த கோட்டையில்,பல கோடி ரூபாய் மதிப்பிலான, தங்க வைர நகைகளை மறைத்து வைத்துள்ளதாக கூறப்படுகிறது.
தொல்லியல் துறையினர்,கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 12ம்தேதி ஆய்வு மேற்கொண்டதில், புதையலை எடுப்பதற்காக சென்னூர் கோட்டையை சுற்றிலும் 3 இடங்களில் சுரங்கம் தோண்டப்பட்டது.
அப்போது, யானைகளின் எலும்புகள், தந்தம் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.பின்னர் அங்குள்ள கிணறு வழியாக ஸ்கேனர் கருவிகளை கொண்டு அதிகாரிகள் சோதனை செய்த போது,வைர மலை இருப்பது தெரியவந்துள்ளது.

வைர மலை : 12 மீட்டர் உயரமுள்ள வைர மலை கண்டுபிடிப்பு...
மத்திய அரசிடம் அனுமதி பெற்று, வைர மலையிலிருந்து வைரத்தை பிரித்து எடுக்க தற்போது ஆலோசனை நடைபெற்று வருகிறது.இந்த அனைத்து தகவலையும் சுங்கத்துறை உதவி இயக்குநர் நடராஜன் செய்தியாளர்களுக்கு தெரிவித்தார்.
