Asianet News TamilAsianet News Tamil

கனமழையால் முல்லை பெரியார் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு.. முதல்வர் ஸ்டாலினுக்கு கேரள முதல்வர் கடிதம்

முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 136 அடியை எட்டியுள்ளது. எனவே அணையில் இருந்து இன்று நீர் திறந்து விடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதை முன்னிட்டு கரையோரங்களில் இருப்பவர்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

Water level increased 136 feet in Mullaperiyar Dam; today water release
Author
Kerala, First Published Aug 5, 2022, 9:50 AM IST

கேரளாவில் கடந்த சில நாட்களாக பெய்யும் கனமழையால் முல்லைப் பெரியாறு அணையின் நீர்வரத்து அதிகரித்து வருவதால் நீரை திறந்து விடக்கோரி கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 136 அடியை எட்டியுள்ளது. எனவே அணையில் இருந்து இன்று நீர் திறந்து விடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதை முன்னிட்டு கரையோரங்களில் இருப்பவர்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்து வருவதால் இன்று காலை பத்து மணிக்கு அணையில் இருந்து நீர் வெளியேற்றப்படும் என்று இடுக்கி மாவட்ட தகவல் அதிகாரி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இடுக்கி மாவட்ட எம்எல்ஏ ரோசி அகஸ்டின் தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தக் கடிதத்தில், முல்லைப்பெரியாறுக்கு வரும் நீர்வரத்து பகுதிகளில் தொடர்ந்து கன மழை பெய்து வருவதால், அணையில் நீரின் இருப்பை குறைக்க வேண்டியது உள்ளது. இதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டு உள்ளதாக தெரிகிறது.

இதையும் படிங்க;- 136 அடியை எட்டியது முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டம்… கரையோர மக்களுக்கு எச்சரிக்கை!!

Water level increased 136 feet in Mullaperiyar Dam; today water release

நீரை வெளியேற்ற வேண்டும் இல்லாவிட்டால் கசிய வாய்ப்பு இருப்பதாக தமிழ்நாடு அரசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் தொடர்ந்து மழை வெளுத்து வாங்கி வருகிறது. இன்றும் கேரளாவின் 9 மாவட்டங்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. 

Water level increased 136 feet in Mullaperiyar Dam; today water release

கேரளாவின் பதனம்திட்டா, எர்ணாகுளம், திருச்சூர், பாலக்காடு, கண்ணூர், வயநாடு, கோட்டயம், இடுக்கி, ஆழப்புழா ஆகிய மாவட்டங்களில் இருக்கும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, கேரளாவில் கடந்த சில நாட்களாக பெய்யும் கனமழையால் முல்லைப் பெரியாறு அணையின் நீர்வரத்து அதிகரித்து வருவதால் நீரை திறந்து விடக்கோரி கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியுள்ளார். 

இதையும் படிங்க;-  10 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்.. 13 பேரை காவு வாங்கிய பெய் மழை.. 12 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.!

Follow Us:
Download App:
  • android
  • ios