Watch : ஹைதரபாத் மெஸ், சட்னி அண்டாவில் விழுந்து நீச்சலடித்த எலி! Viral Video!
ஹைதராபாத், சுல்தான்பூரில் உள்ள ஜவஹர்லால் நேரு டெக்னாலஜிக்கல் யுனிவர்சிட்டி (JNTUH) , சட்னி அண்டாவில் எலி ஒன்று நீந்திய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
ஹைதராபாத் சுல்தான்பூரில் உள்ள ஜவஹர்லால் நேரு தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் (JNTUH - ஜேஎன்டியூஎச்) உள்ள சட்னி அண்டாவில் விழுந்த எலி தப்பிக்க முடியாமல் நீந்திக் கொண்டிருந்தது. இதனை வீடியோ எடுத்து லக்ஷ்மிகாந்த் என்பவர் X தளத்தில் பதிவிட்டுள்ளார்.
இப்பலைகழக மெஸ்ஸில் உணவு பாதுகாப்புதுறை அதிகாரிகள் அண்மையில் சோதனை நடத்தியது குறிப்பிடத்தக்கது. அப்போது, பூஞ்சைகளால் பாதிக்கப்பட்ட காய்கறிகள், வண்டுகள் நிறைந்த மாவு மற்றும் சுகாதாரமற்ற சமையலறைகளை உள்ளவைகளை அதிகாரிகள் சுட்டிக்காட்டி இருந்தனர். இந்த நிலைமையை, தற்போது எலி விழுந்த காட்சி வெளிச்சம்போட்டு காட்டியுள்ளது.
கல்லூரி முதல்வர் ஆலோசனை
இந்த சம்பவத்தை உறுதி செய்த கல்லூரி அதிகாரிகள், கல்லூரியில் உணவு சமைத்து பரிமாறும் ஏஜென்சியே பொறுப்பேற்க வேண்டும் என தெரிவித்துள்ளனர். மேலும், இதுதொடர்பாக கல்லூரி முதல்வர் தற்போது மற்ற நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தனர்.
முதல் மேப் வெளியானது.. ராமர் சேது பாலத்தின் ரகசியத்தை கண்டுபிடித்த இஸ்ரோ விஞ்ஞானிகள்..
பெற்றோர்கள் கவலை
இச்சம்பவத்தைத் தொடர்ந்து கவலையடைந்த பெற்றோர்கள், உணவுப் பாதுகாப்பு குறித்தும் கல்லூரி அதிகாரிகளின் அணுகுமுறை குறித்தும் கேள்வி எழுப்பி வருகின்றனர். மாணவர்கள் தங்கள் பிரச்சினைகளை வெளிப்படையாகப் பேச பயப்படுகிறார்கள் என்றும், மாணவர்கள் தொடர்ந்து நோய்வாய்ப்படுவதகாவும் பெற்றோர் தெரிவிக்கின்றனர். கல்லூரியில் மாணவர் அமைப்புகள் இல்லாததால், அணிதிரள முடியாமல் தவிப்பதாக தெரிவித்த பெற்றோர், இப்பிரச்சினைக்கு தீர்வு காண தாங்களே கல்லூரியில் போராட்டம் நடத்த உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
உணவு பாதுகாப்புதுறை அதிகாரிகள் சோதனை
JNTUH வளாகத்தில் உணவில் மாசு இருப்பது கண்டறியப்படுவது இது முதல் முறையல்ல. கடந்த ஜூன் 28 அன்று, உணவு பாதுகாப்பு அதிகாரிகள் கல்லூரியில் சோதனை நடத்தினர். அப்போது, கருப்பு வண்டுகள் தாக்கப்பட்ட மாவு, பூஞ்சை மற்றும் எலி கழிவுகளால் மாசுபட்ட காய்கறிகள், காலாவதியான உணவு மற்றும் சுகாதாரமற்ற சமையலறை உள்ளிட்டவைகளை சுட்டிக்காட்டினர். சோதனை முடிந்த பின்னர், எந்த முன்னெடுப்பு நடவடிக்கை இல்லை என தெரிவித்த மாணவர்கள், உணவில் பூச்சிகள் காணப்பட்டதை வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டனர்.
PM Awas Yojana பணம் கிடைத்தவுடன் ஓட்டம் பிடித்த குடும்ப பெண்கள்! உ.பி.யில் பலே சம்பவம்!
மாணவர்கள் கவலை
கல்லூரி மெஸ் குறித்து தெவித்துள்ள மாணவர்கள், எங்களுக்கு மூன்று மாதங்களுக்கு ஒரு முறை பில் வழங்கப்படுகிறது. ஒரு தலைக்கு ஒரு நாளைக்கு ரூபாய் 80 செலவாகும் என குறிப்பிட்டனர். மே மாதத்தில் பத்து நாட்கள் மட்டுமே உணவு சாப்பிட்ட நிலையில் தனக்கு ரூ.1,079/- பில் கொடுக்கப்பட்டதாக மாவணவர் ஒருவர் தெரிவித்தார். மேலும், எங்களின் கல்லூரி தேர்வு ஹால் டிக்கெட்டுகளுடன் மெஸ் பில் இணைக்கப்பட்டுள்ளதாகவும், நாங்கள் பணம் செலுத்தாவிட்டால் தேர்வுக்கு வர அனுமதிக்கப்பட மாட்டோம் எனவும் விளக்கம் அளித்துள்ளனர்.
ஐவிஎஃப் கர்ப்பம் பற்றி மனம் திறந்த இஷா அம்பானி.. இளம் பெண்கள் ஏன் அதை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும்?