Asianet News TamilAsianet News Tamil

பாகிஸ்தானுக்கு இந்தியா கடும் எச்சரிக்கை

warning to pakistan
warning to-pakistan
Author
First Published Apr 12, 2017, 7:55 AM IST


கடற்படை முன்னாள் அதிகாரி குல்பூஷன் ஜாதவ் உளவு பார்த்ததாக கூறி பாகிஸ்தானில் கைது செய்யப்பட்டுள்ளார். அவருக்கு நீதிமன்றம் மரண தண்னை விதித்துள்ளது. இந்நிலையில், தண்டனையை நிறைவேற்றினால் பாகிஸ்தான் கடும் விளைவுகளை சந்திக்கும் என்று இந்தியா எச்சரிக்கை விடுத்துள்ளது.

முன்னாள் அதிகாரி

இந்திய கடற்படையில் அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர் குல்பூஷன் ஜாதவ். இவர் கடந்த ஆண்டு ஈரானில் இருந்து பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாநிலத்துக்கு சென்றார். அப்போது, அவரை சந்தேகத்தின் பேரில் கைது செய்த பாகிஸ்தான் அதிகாரிகள், உளவு பார்க்க வந்ததாக அவர் மீது குற்றம்சாட்டினர்.

இந்த சம்பவம் கடந்த ஆண்டு மார்ச்சில் நடந்தது. இதன் பின்னர் ஜாதவ் தொடர்ந்து பணியில் இருப்பதாகவும், இந்திய உளவுத்துறையின் வெளிநாட்டு பிரிவான ‘ரா’வுக்கு அவர் உளவு தகவல்களை அளித்ததாகவும் பாகிஸ்தான் தரப்பி் குற்றம்சாட்டப்பட்டது.

தண்டனை விதிப்பு

இதுதொடர்பான வழக்கை இஸ்லாமாபாத்தில் உள்ள ராணுவ நீதிமன்றம் விசாரித்து வந்தது. இந்த நிலையில் ஜாதவுக்கு கடந்த திங்களன்று மரண தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. முன்னதாக இந்த தண்டனைக்கு பாகிஸ்தானின் ராணுவ தலைமை தளபதி ஜாவேத் பாஜ்வா ஒப்புதல் அளித்துள்ளார்.

இந்த விவகாரம் குறித்து மத்திய அரசு தரப்பில் கடந்த ஆண்டே விளக்கம் அளிக்கப்பட்டிருந்தது. ஜாதவ் தனது ஓய்வுக் காலம் முடிவதற்கு முன்பாகவே பணியில் இருந்து விலகி விட்டதாகவும், அவருக்கும் கடற்படைக்கும் எந்தவித தொடர்பும் கிடையாது என்றும் அந்த விளக்கத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

‘திட்டமிட்ட கொலை’

மேலும், மத்திய வெளியுறவு செயலர் ஜெய்சங்கர், பாகிஸ்தான் தூதர் அப்துல் பாசித்துக்கு சம்மன் அனுப்பினார். பின்னர் அவரிடம் இந்தியாவின் கண்டன அறிக்கை வழங்கப்பட்டது. அதில், சர்வதேச சட்டப்படி கைதான ஜாதவுக்கு இந்திய தூதரகத்தை தொடர்பு கொள்ளும் உரிமை உண்டு.

இதுதொடர்பாக ஜாதவை இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய தூதரகம் பலமுறை கோரியும் அதற்கு அனுமதி அளிக்கப்படவில்லை. அவர் விசாரணைக்கு உட்படுத்தப்படுகிறார் என்ற தகவல் கூட இந்திய தூதரகத்திற்கு தெரிவிக்கப்படவில்லை. இத்தகைய சூழலில் ஜாதவுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டால் அது திட்டமிட்ட படுகொலையாக கருதப்படும் என்று கூறப்பட்டிருந்தது.

பாகிஸ்தானுக்கு ஏற்பட்டால்?

அவரை சமாதானப்படுத்திய மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன், முக்கிய விவகாரம் பற்றி விவாதித்துக் கொண்டிருக்கும்போது கவனத்தை திசை திருப்ப வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார்.

மஜ்லிஸ் கட்சி தலைவர் அசாசுதீன் உவைசி பேசுகையில், மத்திய அரசு தனது ஒட்டுமொத்த வலிமையையும் பயன்படுத்தி குல்பூஷன் ஜாதவை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். காங்கிரசின் சசி தரூர் பேசுகையில், இன்றைக்கு இந்திய குடிமகனுக்கு சிக்கலான சூழல் பாகிஸ்தானில் ஏற்பட்டிருக்கிறது.

நாளை இதேபோன்ற ஒரு நிலைமை பாகிஸ்தானை சேர்ந்த ஒருவருக்கு இந்தியாவில் ஏற்படலாம். இதனை மத்திய அரசுதான் பாகிஸ்தானிடம் தெரிவிக்க வேண்டும் என்றார். இதேபோன்று மற்ற கட்சி உறுப்பினர்களும் ஜாதவை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

 ‘நாடகம் ஆடுகிறது’

இந்த நிலையில் ஜாதவின் விவகாரம் நேற்று நாடாளுமன்றத்தில் எதிரொலித்தது. இதற்கு பதிலளித்து மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசுகையில், ஜாதவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருப்பதை மத்திய அரசு கடுமையாக கண்டிக்கிறது. இதில் ஜாதவுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது. அவருக்கு நீதி கிடைப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசு மேற்கொள்ளும் என்பதை உறுதிபட தெரிவித்துக் கொள்கிறேன்.

ஜாதவிடம் பாஸ்போர்ட் இருந்ததாக பாகிஸ்தான் அரசு ஊடகங்களில் கூறியுள்ளது. ஒருவர் உளவாளியாக இருந்தால் அவர் பாஸ்போர்ட் வைத்திருப்பாரா?. பாகிஸ்தான் நாடகம் ஆடுகிறது என்பதற்கு இந்த ஒரு தகவலே போதும் என்றார்.

மோடி - பாகிஸ்தான்

ஜாதவை பார்க்க இந்திய தூதரகத்திற்கு அனுமதி வழங்கப்படவில்லை என்று மத்திய அரசு தெரிவித்திருந்தது. முன்னதாக கடந்த ஆண்டு பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீபின் மகளின் திருமணத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி சென்றார். இதனை தொடர்பு படுத்தி, காங்கிரஸ் உறுப்பினர் மல்லிகார்ஜுன கார்கே பேசுகையில், மத்திய அரசால் (மோடியால்) அழைப்பிதழ் இல்லாமலேயே திருமணத்திற்கு செல்ல முடிகிறது. அப்படி இருக்கையில் ஜாதவை சந்தித்து இருக்க முடியாதா? அவரை தொடர்பு கொண்டு பேசியிருக்க முடியாதா என்று கேள்வி எழுப்பினார்.

சுமித்ரா மகாஜன் எச்சரிக்கை

இவற்றுக்கு பதிலளித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் பேசியதாவது:- தான் எதிர்கொள்ளவிருக்கும் பின் விளைவுகளை குல்பூஷன் ஜாதவுக்கு மரண தண்டனை நிறைவேற்றும் முன்பாக, பாகிஸ்தான் அரசு யோசித்துக் கொள்ள வேண்டும். இது இரு நாடுகளின் உறவுகள் சம்பந்தப்பட்ட விஷயம். ஜாதவுக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டால் பாகிஸ்தான் கடும் பின் விளைவுகளை சந்திக்க நேரிடும். அவர் ஈரானில் வர்த்தகம் செய்து கொண்டிருந்தார். பின்னர் அவர் பாகிஸ்தானுக்கு கடத்தப்பட்டிருக்கிறார். அவருக்கு மரண தண்டனை நிறைவேற்றுவது என்பது அப்பட்டமான படுகொலைக்கு சமமாக அமையும். இவ்வாறு அவர் கூறினார்.

 

 

 

 

Follow Us:
Download App:
  • android
  • ios