warning for railway staffs

ரெயில்வே துறையில் பணியாற்றும் ஊழியர்கள் சரியாக வேலைசெய்யாமல் “ஓ.பி” அடித்துக் கொண்டு இருந்தாலோ, அல்லது திறமையின்மையாக செயல்பட்டாலோ அவர்களை கண்டிப்பாக வேலையை விட்டுவிட்டு செல்லும், அல்லது விருப்ப ஓய்வு பெற்றுக்கொள்ளும் திட்டத்தை ரெயில்வே கொண்டு வர உள்ளது.

இது குறித்து துறை ரீதியான விவாதங்களும் முடிந்து, முடிவுகளும் எடுக்கப்பட்டுவிட்டது. விரைவில் அமலுக்கு வரும் என ரெயில்வே வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இது குறித்து ரெயில்வேஅமைச்சகத்தின் மூத்தஅதிகாரி ஒருவர் கூறுகையில், “ ரெயில்வே துறையில்இதுபோல் வேலையில் இருந்து கொண்டு சரியாகப் பணியாற்ற 3 உயர்அதிகாரிகளை வேலையைவிட்டு சென்றுவிடுங்கள். நிர்வாகத்தை சீரழிக்காதீர்கள் என்று கூறி அவர்கள் வேலையில் இருந்து ஓய்வுகொடுக்கப்பட்டுவிட்டது.

மேலும், சமீபத்தில் இரு ஐ.பி.எஸ். அதிகாரிகளும் திறமையின்மையாக செயல்பட்டதையடுத்து, அவர்களுக்கும் விருப்ப ஓய்வு கொடுக்கப்பட்டுவிட்டது. ஆதலால், இந்த முறையின் அடிப்படையில், அனைத்து ஊழியர்களின் திறமை, பணி செய்யும் திறன் ஆகியவற்றின் அடிப்படையில் இனி மேல் ஆய்வு செய்யப்பட உள்ளது.

ஊழியர்கள் திறமையின்மையாக, சரியாக செயல்படாவிட்டால், நிச்சயம் பணியில் இருந்து விருப்ப ஓய்வு கொடுக்கப்படுவார்கள்” என்று தெரிவித்தார்.

ரெயில்வை நிர்வாகத்தில் நம்பிக்கையையும், வெளிப்படைத்தன்மையையும் கொண்டு வருவதற்காக இந்த முடிவை ரெயில்வே நிர்வாகம் எடுத்துள்ளது. இதன் மூலம் திறமையான இளைஞர்களும் ரெயில்வே துறைக்குள்வரவும் வாய்ப்பு ஏற்படும்.